• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-11-23 11:41:32    
சீனாவில் இந்திய நாட்டிய நாடகம்

cri

சீன நவீன பாணி ஓவிய அரங்கில் அவர் பணி புரிய துவங்கினார். இந்த கலை அரங்கும், சீனாவில் உள்ள பல வெளிநாட்டு தூதரகங்களுடன் நெருங்கிய தொடர்பு கொண்டுள்ளது. பரந்த அளவிலான சீரான தொடர்பு மூலம், யாங் சி மினும், நவீன பாணி ஓவிய அரங்கும் இந்திய ஓவிய மற்றும் பட காட்சிகள் சிலவற்றை நடத்தினர். காட்சியின் செல்வாக்கு மேன்மேலும் விரிவாகி வருகின்றது. சீன பார்வையாளர்களின் வரவேற்பை மட்டுமல்ல, இந்திய நண்பர்களின் பாராட்டையும் பெற்றுள்ளது. பின்னர், சுன் சின் லின் நிதியத்துக்கு உதவி அளித்து, நகை காட்சி, நடன மற்றும் பாடல் விழா முதலியவற்றையும் நடத்தினார். 2003ஆம் ஆண்டு இந்திய பண்பாட்டு வாரம் பெய்ஜிங்கில் நடைபெற்றது. படம், ஒளி மற்றும் ஒலி நாடா, கருத்தரங்கு முதலியவற்றின் மூலம், பல சீன ரசிகர்கள் இந்தியாவின் மதம், வரலாறு, இசை, நடனம், புகழ்பெற்ற வரலாற்று சிறப்பிடங்கள் ஆகியவற்றை அறிந்து கொள்ள விரும்புகின்றனர்.

இந்தியாவின் பண்பாட்டை வெளிப்படுத்துவதற்கு காட்சிகள் மட்டும் போதாது என்று அவர் கருதினார். காதல் விளக்கு எனும் நடன நிகழ்ச்சியை பெய்ஜிங்கில் அரங்கேற்றுவதற்கு அவர் ஏற்பாடு செய்தார்.

19வது நூற்றாண்டின் 70, 80ஆம் ஆண்டுகளில், இந்திய திரைப்படங்கள் சீனாவில் மிகவும் புகழ்பெற்றன. அவற்றின் இசையும் பாடல்களும் அப்போதைய இளைஞர்களுக்கிடையில் பரவலாகிவிட்டன. தற்போது, அவர்கள் நடு வயதாகிவிட்டனர். ஆனால், இந்திய திரைப்படம் அவர்களின் மனதில் இன்னும் பசுமையாக இருக்கின்றது.

கடந்த ஆண்டு நவம்பர் திங்கள் முதல், அவர் ஏற்பாட்டுப் பணியில் ஈடுபட துவங்கினார். பணியில் சிக்கல் அதிகம், எழுச்சி, நிதி நெருக்கடியும் மனச் சோர்வும் ஏற்பட்டன என்று கூறினார். அவர் கூறியதாவது,

எனது வாழ்க்கையில் கடினமான பணியில் ஈடுபட வேண்டும் என்று கருதுகின்றேன். இது ஒரு கடமை இல்லை. எனது சொந்த தேவையாகும். விருப்பத்தின் படி, சுமையை புறக்கணித்து, இந்திய சீன பண்பாட்டுத் தொடர்பில் சாதனை புரிய வேண்டும் என்று விரும்புகின்றேன் என்றார் அவர்.

காதல் விளக்கு எனும் நடன நிகழ்ச்சியின் லாபம் அனைத்தும் இந்திய எய்ட்ஸ் நோயாளிகளின் குழந்தைகள் நல நிதியத்துக்கு நன்கொடையாக வழங்கப்படும். சீனாவில் 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை இந்திய நடன மற்றும் பாடல் விழாவை நடத்துவது தனது அடுத்த திட்டமாகும் என்று அவர் தெரிவித்தார்.


1  2  3