• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-11-23 11:41:32    
சீனாவில் இந்திய நாட்டிய நாடகம்

cri

கலை பற்றிய ஆர்வத்தினால், பட்டப்படிப்பு படித்த போது, மானிட இயல், கலை ஆகிய துறைகளில் ஈடுபட துவங்கினார். பல்வேறு உலக நாடுகளின் பண்டைக்கால நாகரிகம், குறிப்பாக, இந்தியா, ரோம், கிரேக், கிழக்கு ஆப்பிரிக்கா, பாபிலோன் ஆகிய பண்பாட்டின் மீது அவர் ஆர்வம் காட்டினார். உலக மயமாக்கப் போக்குடன், இத்தகைய பண்டைக்கால பண்பாட்டிற்கு மக்கள் மேலும் அதிக ஆர்வம் காட்டுவர். இது மட்டுமல்ல, இந்த நாகரிகங்கள் நவீன சமூகத்துக்கு மேலும் அதிகமான பாடம் கற்றுத்தரும் என்று அவர் கருதுகின்றார். இந்திய பண்பாடு அவர் மிகவும் விரும்புகின்றார். தெற்கு ஆசியாவின் பண்பாடு சீனாவின் கண்ணோட்டத்தில் மாபெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவின் புத்த மதம் கொன்பூஃசியஸ் சிந்தனையுடன் ஒரே மாதிரியான பொருள் கொண்டதினால், சீனாவில் முக்கிய மதமாக மாறியுள்ளது என்று அவர் கருத்து தெரிவித்தார்.

1997ஆம் ஆண்டு, சீனாவிலுள்ள இந்திய தூதரக அதிகாரி சஞ்சயின் அறிமுகம் அவருக்குக் கிடைத்தது. இந்திய பண்பாட்டை சீன மக்களுக்கு அறிமுகப்படுத்த வேண்டும் என்று அவர் விருப்பம் தெரிவித்தார். அவர் கூறியதாவது

சஞ்சயின் அறிமுகத்தை ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்தி, இந்திய பண்பாட்டை சீனாவுக்கு அறிமுகப்படுத்தலாம் என கருதினேன். சிறு வயதிலேயே இந்திய திரைப்பட இசைகளை மிகவும் விரும்பி கேட்டு வருகிறேன். ஆனால் இந்தப் பணியில் ஈடுபட முன்பு எண்ணவில்லை. எனது பணி ஆர்வத்துடன் இணைப்பது பற்றியும் எண்ணவில்லை. திடீரென்று இது ஒரு நல்ல வாய்ப்பாகும் என்று கண்டுபிடித்தேன் என்றார் அவர்.

1  2  3