
வடமேற்கு சின்ச்சியாங் உய்கூர் தன்னாட்சி பிரதேசத்தில் நிலநடுக்கம் அடிக்கடி நிகழ்கின்றது. கடந்த ஆண்டு துவக்கம் முதல், சின்ச்சியாங்கில் நிலநடுக்கத்தை தாக்குப் பிடிக்கும் குடியிருப்பு கட்டும் பணி துவக்கப்பட்டது.
யக்குபு வயது 38. தனது புதிய வீடு, சின்ச்சியாங்கில் நிலநடுக்கத்தைத் தாங்கும் தடுப்பு குடியிருப்பு திட்டப்பணியில் சேர்ந்தது என்று அவர் சொன்னார். புதிய வீட்டில் கவலை இல்லாமல் நன்றாகத் தூங்கலாம் என்பது தான் மிகவும் முக்கிய விஷயம் என்று அவர் உணர்ச்சி வசப்பட்டுக் குறிப்பிட்டார்.
குழந்தைகள் இல்லாத பல முதியோர்களும் இந்த திட்டப்பணினால் நன்மை பெற்றுள்ளனர். 75 வயதுடைய அசிஹன் முலாக் கூறியதாவது,
2 ஆண்டுகளுக்கு முந்திய நிலநடுக்கத்தில் எனது வீடு இடிந்தது. பின்னர், அரசு ஒரு முதியோர் மையத்தைக் கட்டியது. இந்த மையத்தில் நான் இப்போது நன்றாக உணவு உண்டு, வசிக்கின்றேன். பணியாளர்கள் எங்களைக் கவனமாக கவனிக்கின்றார்கள் என்றார் அவர்.
1 2 3
|