
அவரைப் போல் இந்த மையத்தில் சுமார் 40 முதியோர்கள் வசிக்கின்றனர். 10 பணியாளர்கள் அவர்களை கவனிக்கின்றனர். இது மட்டுமல்ல மருத்துவர்கள் திட்ட படி அவர்களின் உடல் நலத்தை பரிசோதித்து, அவர்களுக்குச் சிகிச்சை அளிக்கின்றனர்.
பழைய முகவரியிலும் இங்கேயும் நிலநடுக்கத்தைத் தாங்கும் பல வீடுகள் கட்டப்பட்டன. இவற்றில் சில கால்நடை வளர்ப்பு பிரதேசங்களும் இடம்பெறுகின்றன. இத்தகைய நிலநடுக்க தடுப்பு குடியிருப்புகள் விவசாயிகளின் வீட்டு வசதிகளை மேம்படுத்தும் அதேவேளையில், அவர்களின் வாழ்க்கை தரத்தையும் உயரத்தும் என்று சியாஸ் மாவட்டத்தின் தலைவர் சாங் ஹுன் வென் கூறினார். அவர் கூறியதாவது
முன்பு, சியாஸ் மாவட்டத்தில் விவசாயிகளின் வீடுகள் சிதறி இருந்தன. மின்சாரம் மற்றும் குடிநீர் விநியோகம், போக்குவரத்து ஆகிய வசதிகளைத் தருவது கடினமாக இருந்தது. இந்நிலைமையில், குடியிருப்புக்களை குவித்துக் கட்டத் திட்டமிட்டுள்ளோம். இப்படி செய்ததால் அடிப்படை வசதிகளை அமைப்பதில் பெரும்தொகை நிதி சிக்கனப்படுத்தப்பட்டது. இந்த பணி நிறைவேறிய பின், மின்சார மற்றும் குடிநீர் விநியோகம், போக்குவரத்து, தொலைபேசி, CABLE டீ,வி ஆகிய வசதிகளை நிறைவேற்ற திட்டமிட்டுள்ளோம். இதன் மூலம், மக்களின் வாழ்க்கைக்கு வசதி தந்து, ஒவ்வொரு ஊரின் வாழ்க்கைத் தரத்தையும் உயர்த்துவோம் என்றார் அவர்.
1 2 3
|