
திட்டத்தின் படி, சியாஸ் மாவட்டத்தில் மொத்தம் 600க்கும் மேற்பட்ட நிலநடுக்கத்தைத் தாங்கும் குடியிருப்புகள் கட்டப்படும். தற்போது, 130 குடியிருப்புக்கள் கட்டப்பட்டன அல்லது கட்டப்பட்டு வருகின்றன என்று சாங் ஹுன் வென் கூறினார்.
நிலநடுக்கத்தை தாங்கும் தடுப்பு திட்டப் பணியில் நடுவண் மற்றும் சின்ச்சியாங் உள்ளூர் அரசு குறைந்தது 100 கோடி யுவானை முதலீடு செய்யும் என்று சின்ச்சியாங் உய்கூர் தன்னாட்சி பிரதேசத்தின் தலைவர் ஸ்மாய் தேலிவால்தி கூறினார். அவர் கூறியதாவது,

கடந்த ஆண்டு, இந்தத் திட்டப்பணியில் 16 கோடி யுவான் முதலீடு செய்துள்ளோம். இவ்வாண்டு, மேலும் 30 கோடி யுவான் முதலீடு செய்கின்றோம். 5 ஆண்டுகளுக்குள், சின்ச்சியாங் மக்களின் நிலநடுக்கத்தை தாங்கும் குடியிருப்பு பிரச்சினையைத் தீர்க்க மனவுறுதி கொண்டுள்ளோம் என்றார் அவர்.
சின்ச்சியாங்கில் நிலநடுக்கத்தை தாங்கும் திட்டப்பணி 2008ஆம் ஆண்டின் இறுதிக்குள் நிறைவேற்றப்படும். அப்போது சின்ச்சியாங்கில் பல்வேறு தேசிய இனங்களைச் சேர்ந்த சுமார் 10 இலட்சம் மக்கள் பயனடைவார்கள். 1 2 3
|