• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-11-29 09:44:20    
தாய்மார் மற்றும் குழந்தைகளுக்கான நல வாழ்வு பாதுகாப்பு

cri
ராஜா...திபெத் தன்னாட்சி பிரதேசத்தில் மகளிர் மற்றும் குழந்தை நலவாழ்வு பாதுகாப்பு துறை கடந்த 80ம் ஆண்டுகளில் வளர்ச்சியடைந்துள்ளது. 20 ஆண்டுகளுக்கு மேலான முயற்சியுடன் தற்போது திபெத்தில் அனைத்து வட்டாரங்களில் மகளிர் மற்றும் குழந்தை நலவாழ்வு பாதுகாப்பு மருத்துவ மனைகள் நிறுவப்பட்டுள்ளன. அதேவேளையில் பெரும்பாலான வட்ட நகரங்களில் மைய மருத்துவ மனை உள்ளது. மகளிர் மற்றும் குழந்தை நலவாழ்வு பாதுகாப்பு துறைக்கு குறிப்பட்ட டாகடர் பொறுப்பு ஏற்கின்றார் என்று நான் கேட்டறிந்துள்ளேன். இது உண்மையா?

கலை....உண்மைதான். நான் லின்சு மாவட்டத்தின் புசியூ வட்டத்திலுள்ள மைய மருத்துவ மனையில் மகளிர் மற்றும் குழந்தை நலவாழ்வு பாதுகாப்பு துறையில் ஈடுபடும் டாக்டர் திபெத் இளம் பெண் தைச்சன் பற்றி உதாரனமாக உங்களுக்கு அறிமுகப்படுத்தலாம். புசியூ வட்டத்தில் 13 கிராமங்கள் உள்ளன. 2400க்கும் மேற்பட்ட விவசாயிகளும் ஆயர்களும் வாழ்கின்றனர். தைசன் அவர்களுக்கு நன்றாக சேவை புரியும் வகையில் சிகிச்சை முறைகள் பற்றிக் கற்றுக் கொள்ள மருத்துவ மனைத் தலைவர்கள் அவரை சீனாவின் சியான் சூ மாநிலம் மற்றும் சுசான் மாநிலத்துக்கு அனுப்பினர். அவர் அங்கே 5 ஆண்டுகள் பயின்றார்.

1  2  3