• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-11-28 15:18:59    
சீனாவின் தொழில் சின்ன நெடுநோக்கு திட்டம்

cri

சீனாவின் வெளிநாட்டு வர்த்தகம் வளர்ச்சி கண்டுள்ள நிலையில், சீனாவில் தயாரிக்கப்பட்டது என்று முத்திரைபொறிக்கப்பட்ட உற்பத்திப் பொருட்கள் உலக சந்தையில் வகிக்கும் விகிதமும் அதிகரித்து வருகிறது. ஆனால், சீனாவின் புகழ்பெற்ற தொழில் சின்னங்கள் எவை என்பது, வெளிநாட்டு நுகர்வோருக்கு தெரிவதில்லை. இந்த நிலைமை, எதிர் வரும் சில ஆண்டுகளில் மாறக் கூடும். தற்போது புகழ்பெற்ற தொழில் சின்னங்களை சீனா விரைவாக வளர்த்து வருகிறது. எதிர்கால சர்வதேச சந்தையில் சீனாவின் புகழ்பெற்ற தயாரிப்புக்கள் கூடுதலாக காணப்படலாம்.

சீனாவில் சீர்திருத்தமும் வெளிநாட்டுத் திறப்பும் நடைமுறைக்கு வந்தது முதல், உலகப் பொருளாதாரத்தில் சீனாவின் தகுநிலை உயர்ந்து வருகிறது. ஆனால், சீனத் தொழில் துறையின் தொழில் நுட்பம் பொதுவாக பின்தங்கிய நிலையிலேயே இருப்பதால், பல தொழில் நிறுவனங்கள் தயாரிக்கும் உற்பத்திப் பொருட்களின் மதிப்பு தொடர்ந்து தாழ்ந்த நிலையில் உள்ளன. லாபம் மிகவும் குறைவு. பெரும்பாலான லாபம் புகழ்பெற்ற அந்நிய தொழில் நிறுவனங்களுக்கு கிடைத்து வருகிறது. பொருளாதார கட்டமைப்பை சீர்படுத்தி, வளர்ச்சி முறையை மாற்றி, தொடர்ந்து விரைவான வளர்ச்சி காண, புகழ்பெற்ற தொழில் சின்னம் கொண்ட உற்பத்திப் பொருட்களை சீனா அதிகமாக வளர்க்க வேண்டும் என்று சீனத் தேசிய தரக் கட்டுப்பாடு மற்றும் பரிசோதனை தலைமை பணியகத்தின் தரக் கட்டுப்பாட்டு பிரிவுத் தலைவர் சுன் போ கூறினார். அவர் கூறியதாவது—

"அந்நிய நிறுவனங்களின் புகழ்பெற்ற தொழில் சின்னங்களுடன் போட்டியிடுவதற்கு, தொழில் நுட்பத்தின் புத்தாக்கத்தை அதிகரித்து, புகழ்பெற்ற தொழில் சின்னங்களை உருவாக்கும் நெடுநோக்கு திட்டத்தை செயல்படுத்தி, மிக விரைவான வேகத்தில் வளர வேண்டும். தொழில் சின்னப் பிரச்சினை, தற்போதைய பொருளாதார கட்டமைப்பின் சீர்படுத்தலுடனும், வளர்ச்சி முறையுடனும் தொடர்புடையது. அது மட்டுமல்ல, தேசியப் பொருளாதாரத்தின் தொடர்ச்சியான வளர்ச்சியுடனும், நாட்டின் நவீன கட்டுமானம் மற்றும் எதிர்காலத்துடனும் தொடர்புடையது. இது ஒரு முக்கிய நெடுநோக்கு பிரச்சினை" என்றார் அவர்.

1  2  3