• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-11-28 15:18:59    
சீனாவின் தொழில் சின்ன நெடுநோக்கு திட்டம்

cri

சீன அரசின் தொழில் சின்னங்களை உருவாக்கும் நெடுநோக்கு திட்டத்தின்படி, பகுதிகளையும் தொழில்களையும் கடந்த கூட்டமைப்புக்கு சீனா ஊக்கமளித்து, போட்டியிடும் திறன் மிக்க சர்வதேச தொழில் சின்னங்களை உருவாக்கும். தவிர, 2000ஆம் ஆண்டு முதல், சீனாவின் புகழ்பெற்ற உற்பத்திப் பொருட்களை மதிப்பீடு செய்யும் பணியை நடத்த, தரகர் நிறுவனங்களுக்கு சீன அரசு ஆக்கப்பூர்வமாக வழிகாட்டியுள்ளது. கடந்த 5 ஆண்டுகளாக, 160க்கு மேற்பட்ட வகைகளிலான உற்பத்திப் பொருட்கள் மதிப்பீட்டு பட்டியலில் சேர்க்கப்பட்டு, 900க்கு அதிகமான உற்பத்திப் பொருட்கள் சீனாவின் புகழ்பெற்ற உற்பத்திப் பொருள் என அங்கீகரிக்கப்பட்டுள்ளன.

சீனாவின் தொழில் சின்ன நெடுநோக்கு, பொருளாதார கட்டமைப்பின் சீர்திருத்தத்தை ஊக்குவித்து, மூலவளத்தின் பங்கீட்டை மேம்படுத்தி, பொருளாதார வளர்ச்சியின் தரத்தையும் பயனையும் உயர்த்தியுள்ளது. சீனாவின் புகழ்பெற்ற உற்பத்திப் பொருட்கள் பல துறைகளில் மேம்பாட்டு தகுநிலையை அடைந்துள்ளன. 60 விழுக்காட்டுக்கு மேற்பட்ட நகரவாசிகளும் கிராமவாசிகளும் இந்தப் பொருட்களை வாங்க விரும்புகின்றனர் என்று அண்மையில் வெளியிடப்பட்ட புள்ளிவிபரங்கள் காட்டுகின்றன.

இந்த தொழில் சின்னங்களை உருவாக்கும் நெடுநோக்கு திட்டம், வட்டாரப் பொருளாதார வளர்ச்சியையும் பயனுள்ள முறையில் அதிகரித்துள்ளது.

சீனாவின் கிழக்கு பகுதியிலுள்ள கடற்கரை நகரான சிங் தௌ, இந்த நெடுநோக்கு திட்டத்தை மிக முன்னதாக நடைமுறைப்படுத்திய நகரங்களில் ஒன்றாகும். இதுவரை, அங்குள்ள 22 தொழில் நிறுவனங்களின் 44 உற்பத்திப் பொருட்கள் சீனாவின் புகழ்பெற்ற உற்பத்திப் பொருள் என அங்கீகரிக்கப்பட்டுள்ளன. புகழ்பெற்ற உற்பத்திப் பொருட்கள், சிங் தௌ பொருளாதாரத்தை வளர்க்கும் முக்கிய ஆற்றலாக மாறிவிட்டன என்று அதன் துணை மேயர் வூ ஜிங் ஜியான் கருதுகிறார்.

1  2  3