"புகழ்பெற்ற உற்பத்திப் பொருள், புகழ்பெற்ற தொழில் நிறுவனம் மற்றும் புகழ்பெற்ற தொழிலின் வளர்ச்சி நிலை, சந்தைப் பொருளாதாரத்தில், ஒரு நகருக்கு விறுவிறுப்பான உயிராற்றல் இருக்குமா என்பதை அளவிடும் வரையறையாகும். சந்தை திறப்பு வாய்ப்பை, சிங் தௌ தொழில் முனைவோர் முழுமையாக பயன்படுத்தி, தொழில் சின்னங்களை உருவாக்கி, பெரும் வளர்ச்சி கண்டுள்ளனர். புகழ்பெற்ற உற்பத்திப் பொருட்களும், பெரிய தொழில் நிறுவனங்களும், சிங் தௌ பொருளாதாரத்தின் விரைவான வளர்ச்சியை தூண்டும் முக்கிய ஆற்றலாக மாறிவிட்டன" என்றார் அவர்.
வீட்டுப் பயன்பாட்டு மின் கருவிகளை உற்பத்தி செய்யும் பெரிய தொழில் நிறுவனமான Haier குழுமம் 1984ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது. கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக, தொடர்ந்து சீரான வளர்ச்சியால், உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் போற்றப்பட்ட பெரிய ரக சர்வதேச குழுமமாக அது மாறியுள்ளது. கடந்த ஆண்டு, Haier என்ற தொழில் சின்னத்தின் மதிப்பு, 6000 கோடி யுவானை தாண்டியது. அண்மையில் பிரிட்டனின் Financial Times செய்தியேட்டில் வெளியிடப்பட்ட சீனாவின் 10 உலகளாவிய தொழில் சின்னங்கள் பற்றிய ஆய்வில், Haier முதலிடம் வகிக்கிறது. தொழில் சின்னத்தை உருவாக்குவது பற்றி, Haier குழுமத்தின் ஆளுநர் யாங் மயான் மயான் அம்மையார் கூறியதாவது—
"தொழில் சின்னத்தை உருவாக்குவதற்கு ஒரு வரை முறை உண்டு. Haier என்ற தொழில் சின்னத்தை சுதந்திர தொழில் சின்னமாக உருவாக்க, இரண்டு புறங்களுக்கு நாங்கள் முக்கியத்துவம் தருகிறோம். ஒரு புறம், சுதந்திரமான உள்நாட்டு தொழில் நுட்பம், மறு புறம், சந்தை புத்தாக்கம்" என்றார் அவர்.
நுகர்வோர் ஏற்றுக் கொள்ளும் உலகளாவிய தொழில் சின்னத்தை சீன தொழில் நிறுவனங்கள் உருவாக்க வேண்டும் என்று உலகளவில் நன்கு விற்பனையாகும் சிங் தௌ பீர் தயாரிப்பு நிறுவனத்தின் ஆளுநர் ஜின் ச்சி கொ கருதுகிறார். அவர் கூறியதாவது—
"சிங் தௌ பீர், உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் புகழ்பெற்ற சர்வதேச தொழில் சின்னம். சர்வதேச அதிகார நிறுவனத்தின் அங்கீகாரம் அதற்கு கிடைத்தது மட்டுமல்ல, உலகில் பரந்துபட்ட நுகர்வோரின் அங்கீகாரமும் கிடைத்தது. சிங் தௌ பீர் என்ற தேசிய தொழில் சின்னத்தை சர்வதேச தொழில் சின்னமாக உருவாக்குவதற்கு, நாங்கள் நுகர்வோருக்கு மகிழ்ச்சியை தருவது முக்கிய தேவை. அவர்கள் மகிழ்ச்சி அடையும் போக்கில் எங்கள் தொழில் சின்னம் வழங்கிய மதிப்பை உணரும்படி செய்ய வேண்டும்" என்றார் அவர். 1 2 3
|