• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-12-02 10:08:33    
சிங்கியாங்கின் டாசி கிராமம்

cri

டாசி கிராமம், சிங்கியாங்கின் தக்ராமகன் பாலைவனத்தின் விளிம்பில் அமைந்துள்ளது. விகுர் மொழியில், டாசி என்பதற்கு, உப்புக்கடல் எனப்பொருள். தென் சிங்கியாங்கின் வேரி மாவட்டத்தில் உள்ள இக்கிராமம் முன்பு தொலைவிலும் அருகிலும் பிரபலமான வறுமைப் பகுதியாகும். டாசி கிராமத்தில் இருபது விழுக்காட்டுக்கும் மேலான கிராமவாசிகளின் வீட்டில் கார் இருக்கின்றது. 50 விழுக்காட்டுக்கு மேலான கிராமவாசிகள், செல்லிட பேசி பயன்படுத்துகின்றனர் என்று அண்மையில் எமது செய்தியாளர் கேள்விப்பட்டார். நிலைமை எப்படி என்பதை அறிய, எமது செய்தியாளர் டாசி கிராமத்துக்குச் சென்றார்.

தென் சிங்கியாங்கின் குர்லே நகரிலிருந்து புறப்பட்டு, சுமார் ஒன்றரை மணி நேரத்துக்குப் பின், டாசி கிராமம் அடைந்தார். இக்கிராமம் பாலைவனத்தின் விளிம்பிலும் உவர் நிலத்திலும் இருந்த போதிலும், கண்கணில் தென்படும் காட்சி எமது செய்தியாளருக்கு வியப்பு தந்துள்ளது.

நண்பர்களே. நான் செய்தியாளர் சாங் ரே. இங்கே, கிராம ஓரத்தில் வளர்ந்துள்ள அடர்த்தியான காடு, அகலமான கர் பி பாலைவனத்தையும் கிராமத்தையும் பிரிக்கிறது. கிராமத்தில், அழகான வீடுகள் ஒரே சீராக உள்ளன. ஒவ்வொரு வீட்டின் முற்றத்திலும் பூவும் பல்லும் நிறைய வளர்கின்றன. சில வீடுகளின் முற்றங்களில், புத்தம் புதிய கார்களும் மோட்டார் சைக்கிள்களும் நிற்கின்றன. கிராமத்தின் வெளிப்புறத்தில் வயலில், பேரி, மாதுளை, திராட்சை முதலிய பழங்கள், மரங்களில் ஏராளமாகப் பழுத்துத் தொங்குகின்றன. பரந்து விரிந்த பருத்தி காட்டில் வெள்ளை வெள்ளென்று பருத்தி கண்களுக்குத் தென்படுகின்றது. எங்கும் அமோக விளைச்சல் காட்சி என்றார்.

1  2  3