• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-12-02 10:08:33    
சிங்கியாங்கின் டாசி கிராமம்

cri

இந்நிலையை எதிர்நோக்கி நினைவுகூரும் போது, 20 ஆண்டுகளுக்கு முன் டாசி கிராமம், அரசின் தானிய உதவியைச் சார்ந்திருந்த ஒரு கிராமமாக இருந்தது என்பதை நம்பவே முடியாது. அப்போது, கிராமத்தின் மொத்த மக்கள் தொகையில் 80 விழுக்காட்டுக்கு அதிகமான விகுர் இனத்தவர்கள், பெரும்பாலும் கால்நடை வளர்ப்பு பழ மரங்கள் வளர்த்தல் ஆகியவற்றைத் தொழிலாகக் கொண்டு வாழ்ந்தனர். ஹான் இன மக்கள், காய்கறி மற்றும் பருத்தி பயிரிடுவதன் மூலம் வாழ்க்கை நடத்தினர். இக்கிராமம் எங்கும் இயற்கை நிலைமை மோசமாக இருந்தது. எனவே, அவர்கள் சிரமப்பட்டு ஒரு ஆண்டு உழைத்த பின்னரும் வியிறாரச் சாப்பிட முடியாமல் திண்டாடினர். வாழ்க்கை நிலை மிகவும் இன்னல். டாசி கிராமத்தின் மாற்றத்துக்கு, உள்ளூரிலுள்ள ஒருவர், அதாவது, உள்ளூர் விகுர் இன ஊழியரான சவூர் மாண்லீக், காரணமாக இருந்தார் என்று கிராமவாசிகள் செய்தியாளருக்குத் தெரிவித்தனர்.

60 வயதான அவர், முன்பு வியாபாரத்தில் ஈடுபட்டார். அதில் நுட்பங்களை நன்கு அறிந்திருந்தார். 20 ஆண்டுகளுக்கு முன், டாசி கிராமக் கமிட்டியின் தலைவராக அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். விவரமான கள ஆய்வு மூலம் மோசமான இயற்கை நிலைமை டாசி கிராமத்தின் வறுமைக்கு முக்கிய காரணம் அல்ல என்ற முடிவுக்கு வந்தார்.

அப்போது, கிராமத்தில் 920 மக்கள் இருந்தனர். அப்பாவி மக்கள் பழமைச் சிந்தனை, உடையவர்களாக இருந்தனர். எந்த செயலையும் செய்யும் போது, பழைய முறையை மேற்கொண்டனர். உழைப்புக்கு ஏற்ற ஊதியம் இல்லை. பயிரிடுவதிலும் முன்னேறிய தொழில் நுட்பம் இல்லை. எனவே, விளைச்சல் குறைவானது.

கிராமவாசிகளின் பழைய கருத்தினை மாற்ற வேண்டும் என்று அவர் மனவுறுதிபூண்டார். கிராமக்கமிட்டியில் விவேகமிக்க இளைஞர்களை அமர்த்தினார். விவசாயிகளுக்குப் பயிரிடுவது பற்றிய அறிவை விளக்கிக்கூற, அவர் தொழில் நுட்ப வல்லுநர்களை வரவழைத்தார். மேலும், தாமே வயலில் சென்று, கிராமவாசிகளுக்கு சாகுபடி நுட்பத்தைச் சொல்லிக்கொடுத்தார். அதே வேளையில், ஒருவரிடமிருந்து ஒருவர் கற்றுக்கொண்டு, உதவிட வேண்டும் என்று அவர் யோசனை கூறினார். இதன் விளைவாக, கிராமத்திலுள்ள ஹான் இனத்தவர்கள், கால்நடை வளர்ப்பிலும், பழமரம் வளர்ப்பதிலும் தேர்ச்சி பெற்றவர்களானார்கள். விகுர் இன மக்கள், காய்கறி பருத்தி பயிரிடுவதில் வல்லுநர்களாக மாறினர்.

இது மட்டுமின்றி, சவூர் மாண்லீக் கிராமத்தில் கல்வி கற்பிக்க வகுப்பையும் நடத்தினார்.

1  2  3