• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-12-02 10:08:33    
சிங்கியாங்கின் டாசி கிராமம்

cri

Mohamed Shawur

கிராமத்தில், எழுத்தறிவின்மை ஒழிப்பு வகுப்பும் நடத்தப்பட்டது. குளிர்காலத்தில் வேளாண் பணி இல்லாத போது கிராமவாசிகளுக்கு உள்நாட்டு வெளிநாட்டு செய்திகளை, குறிப்பாக, வேளாண்மை பற்றிய அறிவியல் தொழில் நுட்ப செய்திகளை தருவது இவ்வகுப்பின் பணியாகும். 1997ம் ஆண்டு வரை, எங்கள் கிராமத்தில் எழுதப்படிக்கத் தெரியாதவர் ஒருவரும் இல்லை.

வெளிப்புறத்தை மேலும் அதிகமாக அறிந்து கொண்டதாலும், அறிவியல் தொழில் நுட்ப அறிவை கூடுதலாக கற்றுத்தேர்ந்ததாலும், டாசி கிராமத்தின் கல்வியறிவுடைய ஒரு பகுதி இளைஞர்கள் கருத்தைப் புதுப்பித்துள்ளனர். சாகுபடி செய்வதன் மூலமும், கால்நடை வளர்ப்பு மூலமும் மட்டும் வளமடைய முடியாது என்பதை அவர்கள் படிப்படியாக புரிந்து கொண்டனர். சிங்கியாங்கின் பல்வேறு இடங்களுக்குச் சென்று, சந்தை தகவலை அறிந்து கொண்ட பின், கோதுமை மாவு பதனீட்டு ஆலை, செங்கல் சூளை, கால்நடை வளர்ப்பு பண்ணை, வேளாண் உற்பத்தி வர்த்தகச் சந்தை, வெப்பக் கூடு அறையில் காய்கறி பயிரிடும் தளம் முதலியவற்றை அவர்கள் நடத்தத்துவங்கினர். உள்ளூர் வளத்தைச் சார்ந்து நடத்தப்பட்ட ஆலைகள், குறைந்த முதலீடு காரணமாகவும், சந்தை தேவை அதிகம் காரணமாகவும், விரைவில் வளர்ந்தன.

34 வயதான Mohamed Shawur, டாசி கிராமத்தில் வளமடைந்துள்ள ஒரு திறமைசாலியாவார். கிராமத்தில் நடத்தப்படும் தொழில் நுட்ப பயிற்சிகளில் கலந்து கொண்ட பின், தமது குடும்பத்தின் பருத்தி விளைச்சல் உயர்ந்தது. அதிக வருமானம் கிடைத்தது என்றார், அவர். இதற்குப் பின், ஆண்டுதோறும் அறிவியல் முறையில் சாகுபடி செய்வது, அறிவியல் முறையில் கால்நடை வளர்ப்பது பற்றிய நூல்களை வாங்கி, நுணுக்கமாக அலசி ஆராய்கின்றார். இப்போது, இணையத்திலிருந்து பெற்றுள்ள தொழில் நுட்ப தகவலைப் பயன்படுத்தி வேளாண் தொழில் நுட்ப வல்லுநர்களின் உதவியுடன், பருத்தி பயிரிடுகின்றார். இது மட்டுமின்றி, Xiang Li எனும் ஒருவகை பேரி பழம் பயிரிடுகின்றார். அத்துடன், தரமான கால்நடை வளர்ப்பு பண்ணையில் முதலீடு செய்து, கால்நடை வளர்ப்பு அளவை விரிவாக்கியுள்ளார்.

தாம் கற்றுத் தேர்ந்த அறிவையும் தொழில் நுட்பத்தௌயும் தம் அண்டை அயலாளர்களுக்கு சொல்லிக்கொடுத்தார்.

Mohamed Shawur வளமடைந்து இன்பமாக வாழ்கின்றார். தவிர, கிராமவாசிகள் வளமடைவதற்கும் அவர் உதவி செய்தார். இரண்டு ஆண்டுகளுக்கு முன் சீன இளைஞர்களுக்கான உச்ச விருது, அதாவது மே 4 இளைஞர் பதக்கத்தைப் பெற்றார். சீனத் தலைவர் கு சிங் தோ அவரைச் சந்தித்துரையாடினார்.

தற்போது, டாசி கிராமத்தின் 310 குடும்பங்களில் 70 குடும்பங்களிடம் கார் உண்டு. ஒவ்வொரு குடும்பங்களுக்கும் ஒரு மோட்டார் சைக்கிள் இருக்கின்றது. 50 விழுக்காட்டினர்கள் செல்லிடபேசி பயன்படுத்துகின்றனர். இதனால் வெளி உலகுடன் வசதியாக தொடர்பு கொள்ளலாம். கடந்த ஆண்டு, டாசி கிராமவாசிகளின் தனிநபர் ஆண்டு வருமானம், 6300 யுவானைத் தாண்டியது. தெற்கு சிங்கியாங்கில் மிகவும் வளமான கிராமமாக, டாசி கிராமம் மாறியுள்ளது.


1  2  3