Yi Wu, கிழக்கு சீனாவின் Zhe Jiang மாநிலத்தில் உள்ள சிறு நகராகும். அன்றாடம் தேவைப்படக் கூடிய சிறு பொருட்களை உற்பத்தி செய்து, மொத்த விற்பனை செய்வதால் இந்நகர் புகழ் பெற்றது. இங்கு கிடைக்கும் சிறு பொருட்கள் விதம்விதமானவை. விலை மலிவு. இதனால், உலகில் பல்வேறு நாட்டு வணிகர்களின் கவனத்தை இந்நகர் ஈர்த்துள்ளது.
திரு Florian Satzinger, Yi Wu நகரில் வியாபாரம் செய்யும் ஜெர்மன் வணிகராவார். நாள்தோறும், உலகில் பல்வேறு இடங்களின் வாடிக்கையாளர்களுக்கு, வணிகப் பொருட்கள் தொடர்பான தகவல்களையும், பல்வகை பின்னணி சேவைகளையும் இவர் வழங்குகின்றார். இது, அவருக்கு பெரும் மகிழ்ச்சி தருகின்றது. Yi Wuயில் தனது வியாபாரம் பற்றி அவர் கூறியதாவது—
"Yi Wu நகர் எங்களுக்கு மனநிறைவு தருகிறது. இங்கு, பல விதமான பொருட்களை வாங்கலாம். இது வசதியாக உள்ளது. இங்குள்ள மக்கள் கடினமாக உழைக்கின்றனர். எங்களுடன் செவ்வனே ஒத்துழைக்கின்றனர்." என்றார் அவர்.
இரண்டு ஆண்டுகளுக்கு முன், வியாபாரம் செய்ய திரு Florian Satzinger, Yi Wu நகருக்கு வந்தார். இங்கு கடை ஒன்றைத் தொடங்க அவர் பதிவு செய்து, ஏற்றுமதி இறக்குமதி வர்த்தகம் சிறப்பாக செய்தார். Florian Satzinger ஐரோப்பாவிலிருந்து கொண்டு வந்த பல பொருட்கள், எடுத்துக்காட்டாக இத்தாலி தோல் காலணிகள், ஜெர்மனியின் beer, பிரெஞ்சு wine போன்றவை இவருடைய கடையில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. தவிர, சீனாவின் பல்வேறு இடங்களில் தயாராகும் அன்றாடத் தேவைப் பொருட்களும் ஏராளமாக விற்கப்படுகின்றன.
தனது வியாபாரம் பெரியதாக இல்லை என்ற போதிலும், இங்குள்ள பெரிய சந்தையினால் தமது கடையின் எதிர்காலம் குறித்து தாம் மிகவும் நம்பிக்கை கொள்வதாக Florian Satzinger தெரிவித்தார்.
1 2 3
|