சீனாவில் Yi Wu நகரின் வணிகத் தொழில் மிகவும் செழிப்பானது. இந்நகரில் வாழ்கின்ற 16 லட்சம் மக்களில், எட்டில் ஒரு பங்கினர் வணிகம் செய்கின்றனர். Yi Wuஇல் உள்ள சிறு வணிகப் பொருள் சந்தையில், உலகில் பல்வேறு இடங்களின் தொழிற்சாலைகளில் தயாராகும் 3 லட்சத்து 20 ஆயிரத்துக்கு அதிகமான பொருட்கள் விற்பனையாகின்றன. இச்சந்தையின் வர்த்தகம், கடந்த 14 ஆண்டுகளாக, சீனாவின் பல்வேறு சந்தைகளில் முதலிடம் வகிக்கின்றது. தற்போது, உலகில் மிக பெரிய அன்றாடத் தேவைப் நுகர்வுப் பொருள் புழக்க மையமாகவும், சீனாவின் முக்கிய வணிகப் பொருள் ஏற்றுமதி தளமாகவும் இது திகழ்கின்றது.
தற்போது, திரு Florian Satzinger போன்று, Yi Wu நகரில் வியாபாரம் செய்யும் அன்னிய வணிகர்களின் எண்ணிக்கை 8 ஆயிரத்தை தாண்டியுள்ளது. அவர்கள், 100க்கு அதிகமான நாடுகள் மற்றும் பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள். அவர்களில், பெரும்பாலானவர்கள், ஜோர்டான், எகிப்து, பலஸ்தீனம் உள்ளிட்ட அரபு நாடுகளிலிருந்து வந்துள்ளனர்.
28 வயதான திரு Khaderalmenawi பலஸ்தீன நாட்டவர். Yi Wu நகருக்கு வரும் முன், சீனாவில் உள்ள ஷாங்காய் போக்குவரத்து பல்கலைக்கழகத்தில் அவர் கல்வி பயின்றார். அவரால் சீன மொழியை நன்கு பேச முடியும். அப்போது, சீனாவில் வியாபாரம் செய்யும் அரபு நண்பர்களுக்கு மொழிபெயர்ப்பாளராக அவர் அடிக்கடி வேலை செய்தார். இதன் விளைவாக, சீனச் சந்தையை அவர் படிப்படியாக புரிந்து கொண்டு, Yi Wu நகரைப் பற்றி அறிந்து கொண்டார். 2001ஆம் ஆண்டில் ஷாங்காய் போக்குவரத்து பல்கலைக்கழகத்தில் படித்து பட்டம் பெற்ற பின், அவர் Yi Wu நகருக்கு சென்று, ஏற்றுமதி இறக்குமதி நிறுவனம் ஒன்றை நடத்தினார். அவர் கூறியதாவத—
"என்னுடன் தொடர்பு கொள்பவர்களில், பலர் Yi Wuஐ அறிந்து கொண்டிருக்கின்றனர். இங்குள்ள வணிகப் பொருட்களின் வகைகள் மற்றும் தரத்தை அவர்கள் பாராட்டுகின்றனர். சீனா வளர்ச்சியடைந்துள்ளது. பல நாடுகளின் வணிகர்கள் இங்கு வணிக வாய்ப்பை கண்டுபிடிக்கின்றனர். இவ்வாய்ப்பை இழக்க, நான் விரும்பவில்லை. பல்வேறு நாட்டு வணிகர்களுக்கு இங்கு தரமிக்க சரக்குகளை கண்டுபிடிக்க என் நிறுவனம் உதவி வழங்குகிறது. " என்றார் அவர்.
1990ஆம் ஆண்டுகளின் நடுப்பகுதி முதல், ஆண்டுதோறும் Yi Wu நகரில் சிறு பொருட்களின் பொருட்காட்சி நடைபெறுகின்றது. சீனா மற்றும் வெளிநாடுகளின் வணிகப் பொருட்கள் பொருட்காட்சியில் வைக்கப்பட்டு, அதிகப்படியான உள் நாட்டு வெளிநாட்டு வணிகர்களை ஈர்த்துள்ளன. கடந்த அக்டோபர் திங்கள் பிற்பகுதியில் நடைபெற்ற பொருட்காட்சியில், 10 ஆயிரத்துக்கு அதிகமான அன்னிய வணிகர்கள் கொள்முதல் செய்தனர்.
1 2 3
|