
கனடாவிலிருந்து வந்த திரு Ruban Kainth, ஏற்றுமதி இறக்குமதி நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்தார். ஆண்டுதோறும் சீனாவுக்கு வந்து கொள்முதல் செய்கின்றார். Yi Wu நகரில் வணிகப் பொருட்களின் விலை மலிவு. தரமிக்கது என்று செய்தியாளரிடம் அவர் கூறினார்.
Yi Wu நகருக்கு வந்து கொள்முதல் செய்யும் அன்னிய வணிகர்கள் சர்வதேச வணிக வர்த்தக மையத்துக்கு வருகின்றனர். தற்போது, உலகில் பரப்பளவில் மிகப் பெரிய மொத்த விற்பனைச் சந்தை இதுவாகும். சர்வதேச வணிக வர்த்தக மையத்தில் அன்னிய வணிகர்கள் அலுவல் செய்யும் சிறப்புப் பிரிவுகள் உருவாக்கப்பட்டுள்ளன. எடுத்துக்காட்டாக, தென் கொரிய பகுதி. கடந்த சில ஆண்டுகளில், Yi Wuயில் உள்ள சந்தையின் வளத்துடன், 3 ஆயிரத்துக்கு அதிகமான தென் கொரிய வணிகர்கள் Yi Wuக்கு வந்து தொழிற்சாலையை நடத்தியுள்ளனர். 45 தென் கொரிய தொழில் நிறுவனங்கள் சர்வதேச வணிக வர்த்தக மையத்தில் அரங்குகளை அமைத்துள்ளன. Yi Wu சந்தையைச் சார்ந்து, உலகில் பல்வேறு இடங்களின் வணிகர்களுக்கு தென் கொரியாவின் தனித்தன்மை வாய்ந்த மின்னணுப் பொருட்கள், மின்சாரக் கருவிகள், கைவினைப் பொருட்கள், அன்பளிப்புப் பொருட்கள், ஆடைகள் ஆகியவற்றை அவர்கள் விற்பனை செய்கின்றனர்.
தொலைபேசிகளை சிறப்பாக விற்பனை செய்யும் கடைக்கு முன், தென் கொரிய மேலாளர் Lee Song Yong செய்தியாளரிடம் கூறியதாவது—
"இங்குள்ள சூழல் சிறந்தது. நல்ல முறையில் நிர்வாகம் செய்யப்படுகின்றது. பல வசதிகள் வழங்கப்பட்டுள்ளன என்று நாங்கள் உணர்கின்றோம். வணிக வர்த்தக மையம், எங்களுக்கு பல தேவையான சேவைகளை வழங்கியுள்ளது. எடுத்துக்காட்டாக, இணையத்தையும் தொலைபேசி இணைப்புகளையும் எங்களுக்கு வழங்கியுள்ளது. நாங்கள் தகவல்களை எந்நேரத்திலும் பெற முடியும். தவிர, தென் கொரிய வணிகர்களுக்கு சிறப்பு உணவு விடுதியையும் துவக்கியுள்ளது." என்றார் அவர்.
Lee Song Yongஐத் தவிர, அன்னிய வணிகர்கள் பலர் Yi Wuயில் வர்த்தகம் செய்வது மிகவும் வசதியாக உள்ளது. இங்கு சேமிப்புக்கிடங்கில் பொருள் சேமிப்பு, பின்னணி சேவை, காப்பு துறை, நிதி, காப்பீடு, தகவல் தொடரமைப்பு உள்ளிட்ட தொடர் நடவடிக்கைகள் முழுமையானவை. அன்னிய வணிகர்களின், ஒரு முறை ஏற்றுமதி இறக்குமதி வியாபாரம் சில நாட்களில் முடிந்து விடுகிறது. 1 2 3
|