• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-12-06 16:53:50    
எட்ய்ஸ் நோய் தடுப்புச் சிகிச்சை பணியில் துவக்க வெற்றி

cri
ராஜா...சீன மூலிகை மருந்து கொண்டு எய்ட்ஸ் நோய்க்கு சிகிச்சை அளிக்கும் பரிசோதனையில் சீனா பூர்வாங்க வெற்றி பெற்றுள்ளது என்று கேள்விப்பட்டேன். இது உண்மையா?

கலை.....உண்மைதான். கடந்த ஆண்டு ஆக்ஸ்ட் திங்களில் சீன மூலிகை மருந்து கொண்டு எய்ட்ஸ் நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கும் பரிசோதனை பணி சீனாவின் 11 மாநிலங்கள் மற்றும் நகரங்களில் துவக்கப்பட்டது.

ராஜா......தகவலை கேட்டதும் மகிழ்ச்சியடைகின்றேன். எய்ட்ஸ் நோய் என்றால், நோய் எதிர்ப்புச் சக்தி குறைவு எனப்படும் நோய் எதிர்ப்புச் சக்தி குறையுமானால் நோய்த் தொற்று ஏற்பட்டு குணமாகாமல் மரணம் ஏற்படும். தற்போது உலக முழுவதிலும் 4 கோடி மக்களுக்கு எய்ட்ஸ் உண்டாக்கும் எச்ஐவி கிருமி தொற்றி அல்லல்படுகின்றனர். அவர்களில் 2 கோடியே 30 லட்சம் மக்கள் இந்த நோய்க்கு பலியாகிவிட்டனர்.

கலை....இப்போது சீனாவில் 8 லட்சத்து 40 ஆயிரம் எச்ஐவி கிருமி தொற்றியவர்களும், எய்ட்ஸ் நோயாளிகளும் உள்ளனர். எய்ட்ஸ் சீனாவில் பரவலாகக் காணப்படும் நிலைமை காணப்படுகின்றது.

ராஜா....எய்ட்ஸ் நோயாளிகளுக்கு சிகிச்சை செய்வதில் பொதுவாக மேலை நாட்டு மருந்தை பயன்படுத்தவே மக்கள் முதலில் விரும்புகின்றனர். கிருமி தொற்றுத் தடுப்புச் சிகிச்சை இதில் மிக பயன் மிக்க வழி முறையாகும். ஆனால் எச்ஐவி கிருமியை ஒழிக்கும் மருந்து இதுவரை கண்டுபிடிக்கப்பட வில்லை. மேலை நாட்டு சிகிச்சையும் அவ்வளவு மனநிறைவு தருவதாக இல்லை. அத்துடன் கிருமியை ஒழிக்கும் மருந்து கடும் பக்க விளைவுகளை ஏற்படுத்துகின்றது.

கலை......இது மக்கள் கவலைப்படும் ஒரு பெரிய பிரச்சினையாகும். சீன மூலிகை மருந்து சிகிச்சையைப் பயன்படுத்தும் போது முதலில் எச்ஐவி கிருமியை ஒழிப்பதற்கு பதிலாக மனிதரின் நோய் எதிர்ப்புத் திறனைப் பாதுகாத்து உயர்த்தி நோயாளியின் நோய் அளவைக் குறைத்து அவரின் வாழ்க்கை தரத்தை உயர்த்துவதன் மூலம் நோயாளிகளை நீண்டகாலத்திற்கு கிருமியுடன் வாழச் செய்வதாகும்.

1  2  3