• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-12-06 16:53:50    
எட்ய்ஸ் நோய் தடுப்புச் சிகிச்சை பணியில் துவக்க வெற்றி

cri

ராஜா... எச்ஐவி கிருமியை ஒழிப்பதில் சீன மூலிகை மருந்தின் பயனை வெளிக் கொணரும் வகையில் சீன அரசு மூலிகை மருந்து நிர்வாக ஆணையம் உள்ளிட்ட துறைகள் 2004ம் ஆண்டில் மூலிகை மருந்து மூலம் எய்ட்ஸ் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் பரிசோதனை முயற்சியை துவக்கியுள்ளன. ஆணையகத்தின் தலைவர் லியூ வென் வூ இது பற்றி கூறியதாவது 2004ம் ஆண்டு ஆக்ஸ்ட் திங்களில் நாட்டின் 5 மாநிலங்களில் மூலிகை மருந்து சிகிச்சை முறையில் எய்ட்ஸ் நோயாளிகளுக்கு பரிசோதனை முறையில் சிரிச்சை அளிக்க த்துவங்கினோம். ஹோ நான், ஹோ பேய், ஆன்குவெய், ஹூபேய், குவாங்துங் ஆகியவை இந்த 5 மாநிலங்களாகும். இவ்வாண்டு ஜுன் திங்கள் வரை 2700 நோயாளிகள் அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுள்ளனர். இவ்வாண்டு வேறு 6 மாநிலங்களை பரிசோதனை இடங்களாக அதிகரித்துள்ளோம். இந்த 6 மாநிலங்களில் சிகிச்சையும் அளிக்கப்படுகின்றது என்றார் அவர்.

கலை......இந்த பரிசோதனை கிசிச்சை பணி அமலாக்கத்துக்கு வந்த பின் சீன மத்திய அரசு இதற்காக 3 கோடியே 60 லட்சம் யுவான் ஒதுக்கியது. மேலும் பல்வேறு இடங்களின் அரசுகளும் இதற்கு நிகரான நிதியை ஒதுக்கி அமைப்பு, நிர்வாகம், அறிவியல் ஆய்வு, மருத்துவ ஊழியர்களுக்கு பயிற்சி போன்ற பணிகளை நடத்த வேண்டும் என்று ஞ மத்திய அரசு பல்வேறு இடங்களின் அரசாங்கங்களை கோரியுள்ளது. இப்போது சீனாவில் எய்ட்ஸ் நோயாளிகளுக்கு சீன மூலிகை மருந்து சிகிச்சையளிக்கும் நிர்வாக அமைப்பு நிறுவப்பட்டுள்ளது. மூலிகை மருந்தை மையமாக கொண்ட எயஸ்ட் தடுப்பு பற்றிய தொழில் நுட்ப திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. எய்ட்ஸ் நோயாளிகளுக்கு சீன மூலிகை மருந்து சிகிச்சை தரும் அணி ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட அளவில் கோவையான மூலிகை மருந்து சிகிச்சை தொடரமைப்பு நிறுவப்பட்டுள்ளது.

ராஜா....இந்த சிகிச்சை தொடரமைப்பையும், உருப்படியான செய்முறைகளையும் பார்க்கலாமா?

கலை......பாருங்கள்.

ராஜா.....பக்க விளைவு உள்ளிட்ட காரணங்களால் மேலை நாட்டு மருந்து கொண்டு சிகிச்சை அளிக்கப்பட எச்ஐவி கிருமி தொற்றியவர்களையும் எய்ட்ஸ் நோயாளிகளையும் அவர்களின் விருப்பத்தின் அடிப்படையில் தேர்வு செய்வது, இந்த நோயாளிகளுக்கு மூலிகை மருந்து சிகிச்சை அளிப்பது, மேலை நாட்டு நோய் தடுப்பு சிகிச்சை பெறுகின்ற எய்ட்ஸ் நோயாளிகளிலிருந்து சிலரைத் தேர்வு செய்து துணை சிகிச்சையாக அவர்களுக்கு மூலிகை மருந்து சிகிச்சை அளிப்பது அந்த நோயாளிகளுக்கு மேலை நாட்டு மருந்து விளைவித்த பக்க விளைவுகளைக் குறைத்து மேலை நாட்டு மருந்தின் பயனை அதிகரிப்பது ஆகியவை பரிசோதனையில் மேற்கொள்ளப்பட்டுள்ள சீன மூலிகை மருந்து சிகிச்சை வழிமுறைகளாகும்.

கலை....தற்போது சீன மூலிகை மருந்து சிகிச்சை பெற்ற எய்ட்ஸ் நோயாளியின் நிலைமை மகிழ்ச்சிகரமாக நிலையில் உள்ளது. இது பற்றி தலைவர் லியூ வென் பின் கூறியதாவது

ராஜா....... எய்ட்ஸ் நோயாளிகள் முன்பு மேலை நாட்டு மருந்து உட்கொண்ட போது தோன்றிய வயிற்று போக்கு, வாந்தி, வியர்வை பெருக்கெடுப்பது, மூச்சுத்திணறல் சக்தி இன்மை போன்ற பக்க விளைவுகள் மூலிகை மருந்து உட்கொண்டபின் குறைந்து விட்டன. குறிப்பாக நோய் வைரஸ் தடுப்பு மருந்து ஏற்படுத்திய நச்சு மற்றும் பக்க விளைவு பெரிதும் குறைந்துள்ளது. சீன மூலிகை மருந்து சிகிச்சை பெறும் நோயாளிகளை அவர்களின் குடும்பத்தினர் வரவேற்கின்றனர். சீன மூலிகை மருந்து மூலம் எய்ட்ஸ் நோய் சிகிச்சை அளிப்பதில் நல்ல அனுபவம் கிடைந்துள்ளது. அதற்கான சிகிச்சை முறையும்

1  2  3