• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-12-13 08:39:53    
குடுப உறுப்பினர்களிடேயே ஏற்படக் கூடிய முரண்பாடுகளை எப்படி சமாளிப்பது

cri

கலை.....இதைத் தவிர, வேறு எந்த மாறுதலும் அந்த வயதில் ஏற்படுமா?

ராஜா.....ஹார்மோன் சுரப்பால் உடம்பில் சிறுமாறுதல்கள் அவ்வளவு தான் பிறந்ததிலிருந்து அன்பு காட்டி நாம் வளர்த்த அதே குழந்தைகள்தானே.

கலை....இந்த உண்மை பல பெற்றோர்களுக்கு புரிவதே இல்லையே! தன் மகன் அல்லது மகள் 12 அல்லது 13 வயதைக் கடந்துவிட்ட உடனேயே, குடும்பச் சுமையை சுமக்கும் அடுத்த வாரிசு இதுதான் என சிலர் தலையில் தூக்கி வைத்து ஆடுகின்றனர்.

ராஜா....வேறு சிலரோ மகனும், மகளும் பெரியவர்களாகி விட்டார்களே, இப்போதே அடக்கி வைத்தால்தான் உண்டு என்று எண்ணி பொத்தி பொத்தி பாதுகாக்கத் துவங்குகின்றனர்.

கலை....இந்த இரண்டு அணுகுமுறைகளுமே மிகத் தவறானவை. நான் சொல்வது சரிதானே.

ராஜா....சரிதான். குழந்தைகளை அந்தந்தப் பருவத்துக்கு ஏற்ற வகையில் இருக்க விடுவதுதான் மிகவும் நல்லது. மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் ஏற்படும் மாற்றங்களை அவர்கள் போக்கிலேயே அணுகிப் புரிய வைக்க வேண்டும்.

கலை...இதையெல்லாம் நீங்கள் அன்பாக சொல்லிக் கொடுத்து புரி வைக்க முடியாதபோது அவர்கள் பக்கத்து வீட்டுக்காரர்களிடம் இருந்தோ அல்லது நண்பர்களிடம் இருந்தோ தெரிந்து கொண்டு, உங்களிடமிருந்து ஒதுங்கி விடுகிறார்கள். அவர்களுடன் அதிக நேரத்தை செலவிடத் துவங்குவார்கள். குழந்தைகள் கெட்டுப் போகத் துவங்குவதற்கு முதல் படியே இதுதான்.

ராஜா....நம்முடைய அனைத்துப் பிரச்சினைகளையுமே கலந்து ஆலோசிக்க உரிய இடம் நமது வீடுதான் என்ற எண்ணம் ஒவ்வொரு குழந்தையின் மனதிலும் தோன்ற வேண்டும். பருவ வயதுள்ளவர்கள், எப்போதும் தங்களுக்கு ஒத்த வயதில் இருப்பவர்களுடன் தங்களை ஒப்பிட்டுப் பார்த்துக் கொண்டே இருப்பார்கள்.

கலை....எனவே, அவர்களின் மனம் புண்படாமல் கவனமுடன் நடந்து கொள்ள வேண்டியது மிகவும் முக்கியமானதாகும். ராஜா....குழந்தைகளுக்கு அதிக சுதந்திரம் வழங்குவதும் தவறு. அதேபோல், அடக்குமுறையைக் கையாள்வதும் ஆபத்தில் கொண்டு போய் சேர்க்கும்.

கலை..... நீங்கள் சொன்னது சரிதான். சின்னச்சின்னப் பிரச்னைகளை அவர்களிடம் துருவித் துருவி ஆராய வேண்டாம். வீட்டில் நட்பான சூழ்நிலையை ஏற்படுத்த வேண்டும். பெற்றோர் ஒருவருக்கொருவர் அன்பாகவும், மரியாதையுடனும், புரிந்து கொள்ளுதலுடனும் இருந்தால், அந்த சூழ்நிலையில் வளரும் குழந்தைகளும் நல்லவர்களாகவே இருப்பார்கள். அப்படித்தானே.

1  2  3  4