• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-12-13 08:39:53    
குடுப உறுப்பினர்களிடேயே ஏற்படக் கூடிய முரண்பாடுகளை எப்படி சமாளிப்பது

cri

ராஜா....ஆமாம். ஓய்வு நேரங்களில் குழந்தைகளுடன் ஒன்றாக உட்கார்ந்து பேச வேண்டும். பள்ளியில் படிக்கும்போது, உடன் படிப்பவர்களுடன்

நட்பு ஏற்படுவது தவிர்க்க முடியாதது. இந்த நட்பு, ஒன்றாக அமர்ந்து படிப்பது, பாடத்தில் சந்தேகம் கேட்பது என்ற அளவில் நின்றுவிட வேண்டு இதைத் தாண்டிச் செல்லக் கூடாது. மகனோ அல்லது மகளோ தங்கள் நண்பர்களை வீட்டிற்கு அழைத்து வந்தால் அதை துவக்கத்திலேயே நாசுக்காக பேசி தவிர்த்துவிடுதல் நல்லது. உங்கள் விருப்பத்துக்கு மாறாக உங்கள் குழந்தை உடை அணிய ஆரம்பித்தால், அதையும் துவக்கத்திலேயே தடுத்து நிறுத்துதல் நல்லது.

கலை....நண்பர்களே நாங்கள் சொன்னது உங்கள் வாழ்க்கையில் சிறியளவில் உதவி இருந்தால் நாங்கள் மகிழ்ச்சியடைவோம்.

ராஜா.....அடுத்து வாழ்க்கையில் கவனம் செலுத்த வேண்டிய வேறு பாதுகாப்பு பற்றி பேசலாமா?

கலை.....என்ன பாதுகாப்பு?

ராஜா.....சுற்றுலா செல்லும் போது வீட்டுப் பாதுகாப்பு' நகரவாசிகள் சுற்றுலாவிற்கு கிளம்பும்போது, அவர்கள் முன்னே நிற்கும் மிகப் பெரிய கேள்வி வீட்டைப் பத்திரமாக பாதுகாப்பது எப்படி என்பதுதான்.

கலை....ஆமாம். சுற்றுலா செல்லும்போது பக்கத்து வீட்டை தாங்கள் வரும்வரை வீட்டைப் பார்த்துக் கொள்ளுங்கள் என்று கூறுவியராம். ஆனால், நம் வீட்டைக் கவனித்துக் கொள்வது தானா பக்கத்து வீட்டுக்காரர்களின் வேலை?

ராஜா....எனவே சம்பந்தப்பட்டவர் நாம் தான் கவனமாக இருக்க வேண்டும் சரி, சுற்றுலா செல்வதற்கு முன் என்னென்ன முன்னெச் சரிக்கை செய்ய வேண்டும் என்பதைப் பற்றி பார்ப்போம்.

கலை.....விபரமாக சொல்லுங்கள்.

ராஜா...சில கருத்துக்களைச் சொல்கின்றேன்.

1. சுற்றுலா நேரங்களில் மட்டுமல்லாமல் எந்த நேரத்திற்கும் உதவும் வகையில் வீட்டின் பாதுகாப்புக்கு காப்பீடு செய்து கொள்வது நல்லது. இதன் மூலம், நாம் இல்லாத நேரங்களில் ஏற்படும் தீவிபத்துக்கள் மற்றும் இதர விபத்துக்களுக்கு நாம் காப்பீட்டுத் தொகை பெற்று இழப்பை ஈடுகட்டிக் கொள்ள முடியும்.

கலை....இரண்டாவது கவனிப்பு நான் சொல்லடுமா?

ராஜா....சொல்லுங்கள்.

கலை....2. சுற்றுலாவுக்கு கிளம்பும் முன்பு, வீட்டிலுள்ள ஒவ்வொரு பொருளையும் அதன் இயல்பு மற்றும் பயன்பாட்டுக்கு ஏற்ப தனித்தனியாக வைக்க வேண்டும். இவற்றின் பாதுகாப்பு, தூய்மை, பராமரிப்புக்கு செய்ய வேண்டிய பணிகளைச் செய்து விட வேண்டும்.

ராஜா....ஆமாம். இது மட்டுமல்ல, சுற்றுலா செல்வதற்கு முன் வீட்டில் வளர்க்கும் செல்லப் பிராணிகளை எப்படி பாதுகாப்பது என்பதும் ஒரு பெரிய பிரச்னை. இதை உரிய முறையில் கையாள வேண்டும். செல்லப் பிராணிகளை சுற்றுலாவிற்கு உடன் எடுத்துச் செல்வது அதன் உடல் நலப் பாதுகாப்பை பாதிக்கும். எனவே சுற்றுலா கிளம்புவதற்கு முன், செல்லப் பிராணிகளை உங்கள் உறவினர்களிடமோ அல்லது நண்பர்களிடமோ விட்டுச் செல்லுங்கள். அதற்கு வாய்ப்பு இல்லையெனில், அவற்றை பாதுகாக்கப்பதற்காகவே நடத்தப்படும் தனிவிடுதிகளில் விட்டுச் செல்லலாம்.

1  2  3  4