• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-12-13 08:39:53    
குடுப உறுப்பினர்களிடேயே ஏற்படக் கூடிய முரண்பாடுகளை எப்படி சமாளிப்பது

cri

கலை........உங்கள் வீட்டுத் தோட்டங்களில் உள்ள செடி கொடிகளை பாதுகாப்பதும் ஒரு முக்கிய செயலாகும். எனவே, சுற்றுலா முடிந்து திரும்பும் வரை, செடி கொடிகளுக்கு தண்ணீர் ஊற்ற உரிய ஏற்பாடுகளை செய்து கொள்ளுங்கள்.

ராஜா..... பயணத்திற்கு முன், வீட்டில் உள்ள எல்லா மின் பொத்தான்களையும் அணைத்து வைக்க வேண்டியது மிகவும் இன்றியமையாததாகும். தொலைக்காட்சிப் பெட்டி,சலவை இயந்திரம் போன்றவற்றை நிறுத்திவிட்டு, பாதுகாப்பாக மூடி வைக்க வேண்டும்.

கலை.....சமையலறையில் நடமாட்டம் இல்லாவிட்டால், கரப்பான் பூச்சிகள் மற்றும் எறும்புகளுக்கு மிகவும் கொண்டாட்ட மாகிவிடும். எனவே, பூச்சிகள் வரும் பகுதிகள் என நீங்கள் கருதும் இடங்களில் தேவையான அளவு பூச்சிக் கொல்லி மருந்துகளை தெளிப்பான் மூலம் தெளிக்க வேண்டும். இதை குறிப்பாக பெண்கள் தெளிவாக கவனிக்க வேண்டும். சமையலறையில் உள்ள எல்லா பாத்திரங்களையும் நன்றாக மூடி வைக்க வேண்டும். சமையல் எரிவாயு இணைப்பை துண்டித்து வைக்க வேண்டும். பயன்படுத்தப்பட்ட அனைத்துப் பாத்திரங்களையும் நன்றாகக் கழுவி வைக்க வேண்டும்.

ராஜா...அழுக்குத் துணிகள் கிருமிகளை விரைவாக உற்பத்தி செய்யும் ஓர் இடமாகும். எனவே, அழுக்கு ஆடைகள் அனைத்தையும் பயணத்திற்கு முன் துவைத்து எடுத்துவைப்பது நல்லது. படுக்கையை வெயிலில் உலர்த்திவிட்டு சுற்றி வைத்து விட வேண்டும். குளியலறையை நன்றாக கழுவ வேண்டும்.

கலை....சுற்றுலாவிற்கு அதிக நகைகள் அணிந்து செல்லுதல் ஆபத்தானது. எனவே, நகைகள் மற்றும் பணத்தை வங்கிப் பெட்டகத்தில் பாதுகாப்பாக வைத்து விட வேண்டும். அதற்கு வாய்ப்பு இல்லையெனில், நெருங்கிய உறவினர்களிடம் அவற்றை கொடுத்துவிட்டுச் செல்லலாம். நகை மற்றும் பணத்தை வீட்டில் வைத்துவிட்டு சுற்றுலாவிற்கு செல்லக் கூடாது.

ராஜா....எல்லா சன்னல்களையும் மூட வேண்டும். நீங்கள் வைத்திருக்கும் வாகனங்களை பாதுகாப்பாக வைக்க வேண்டும். குடியிருப்புப் பகுதியில் பொது வண்டி நிறுத்துமிடம் இல்லாவிடில் நண்பர்கள் அல்லது உறவினர்கள் வீட்டில் அவற்றை விட்டுவிட வேண்டும்.

கலை......வீட்டின் மாடியிலுள்ள தண்ணீர் தொட்டியை நன்றாக மூடி வைக்க வேண்டும். இல்லையெனில், பறவைகள் மற்றும் எலிகளால் தண்ணீர் அசுத்தமாகக் கூடும்.

ராஜா....வீட்டுச் சாவி ஒன்றினை நீங்கள் வைத்துக் கொண்டு, இன்னொரு சாவியை நம்பகமான பக்கத்து வீட்டாரிடம் கொடுப்பது நல்லது. ஏதேனும் பிரச்னை இருப்பின் உடனடியாக கதவைத் திறந்து கண்காணிக்க பக்கத்து வீட்டாருக்கு இது உதவும்.

கலை.....நேயர்களே இன்றைய நலவாழ்வு பாதுகாப்பு நிகழ்ச்சியில் நமது வாழ்க்கையில் கவனம் செலுத்த வேண்டிய விஷயங்கள் பற்றி சொன்னினோம். இன்று சரி இல்லை என்றால் உங்கள் கருத்தை தெரிவியுங்கள்.


1  2  3  4