
ஆண்டுதோறும், ஏப்ரல் திங்கள் முதல் செப்டம்பர் திங்கள் வரை திபெத்தின் தலைநகரான லாசாவிற்கு வடக்கிலுள்ள அலி பிரதேசத்துக்கு செல்வோர், வழியில், Pa Yang Zhen எனும் பட்டணத்தில் தங்கிச்செல்வது வழக்கம். இவர்களில் பலர், குறிப்பாக வெளிநாட்டவர்கள் Mao Niu ஹோட்டல் எனும் ஒரு சிறிய விடுதியில் தங்க விரும்புகின்றனர். இதன் உரிமையாளர் Yixi என்பவர், பழைய திபெத்தில் பண்ணை அடிமைகளின் உரிமையாளராக இருந்தவர். அவரை பற்றி அறிமுகப்படுத்துகின்றோம்.
இப்பட்டணம், இமயமலைக்கும் Gangdisi மலைக்குமிடையிலான பள்ளத்தாக்கில் அமைந்துள்ளது. அங்கு, எழிலான இயற்கை காட்சி. பட்டணத்தில் உள்ள கோயில், பல கிலோமீட்டர் நீளமுடைய பனி சிகரத்துக்கு எதிரே உள்ளது. காற்றில் பறக்கும் மதக்கொடிகள், இப்பள்ளத்தாக்கில் எழில் மிக்க காட்சியாகும். அன்று தென்னாப்பிரிக்க, நியுசிலாந்து, மற்றும் ஆஸ்திரேலிய விருந்தினர்கள் பலர் இந்த விடுதிக்கு வந்தனர். அவர்கள் முற்றத்திலுள்ள ஒரு கிணற்றில் இருந்து நீர் இறைத்து, காரில் நீரை ஏற்றி மலையடிவாரத்தில் கூடாரம் போட்டு தங்கத் தயாராயிருக்கின்றனர். அவர்கள், இன்று தமது விடுதியில் வசிப்பதில்லை என்பதினால் Yixi வருத்தப்படுவது இல்லை. ஏனெனில், தமது விடுதிக்கு வருகை தரும் விருந்தினர்களின் எண்ணிக்கை அதிகமா குறைவா என்பது குறித்து எந்நேரத்திலும் இவர் கவலைப்படவில்லை.
ஹோட்டல் பற்றிக் குறிப்பிட்ட போது, Yixi மிகவும் மகிழ்ச்சியுடன் கூறியதாவது:
"சீர்திருத்த மற்றும் வெளிநாட்டுத் திறப்புக் கொள்கை நடைமுறைக்கு வந்த பின், சீன அரசு, பல முன்னுரிமைக் கொள்கைகளை மேற்கொண்டுள்ளது. வேலை செய்ய விரும்பி, இன்னலுக்கு அஞ்சாமல், சட்டத்தை மீறாமல் இருக்கும் ஒருவர், எதையும் செய்து வளமடையலாம். எடுத்துக்காட்டாக அரசின் ஆதரவுடன் நான் இந்த ஹோட்டலை நடத்துகிறேன். சுற்றுலா செல்லும் முக்கிய பாதையில் இருப்பதால், எனது ஹோட்டலின் வருமானம் பரவாயில்லை" என்றார்.
1 2 3
|