
அவரது ஹோட்டலில் 20க்கும் அதிகமான அறைகள் இருக்கின்றன. 6 லட்சம் யூவான் சொத்து அவருக்கு உண்டு. ஊரில் அவர் பெரிய பணக்காரர். 20 ஆண்டுகளுக்கு முன், இது நினைத்துப் பார்க்க முடியாதது என்று முதியவர் எங்களுக்கு தெரிவித்தார். அவர் கூறியதாவது
"1951ம் ஆண்டு திபெத் சமாதானமாக விடுதலை பெறுவதற்கு முன், Zhongba மாவட்டத்தின் Huoerba பட்டினத்தில் நான், பண்ணை அடிமை சொந்தக்காரராக இருந்தேன். 1959ம் ஆண்டு திபெத்தில், ஜனநாயக சீர்திருத்தம் நடைபெற்ற பின், நான் கைது செய்யப்பட்டேன். Lin Zhiஇலுள்ள சிறையில் 20 ஆண்டுகள் அடைக்கப்பட்டேன்." என்றார்.
திபெத்தில் ஜனநாயக சீர்திருத்தம் நடைபெறுவதற்கு முன், அவருடைய தந்தை அப்போதைய திபெத் உள்ளூர் அரசில் உயர் அதிகாரியாக இருந்ததால், அவர் அங்கு பண்ணை அடிமை சொந்தக்காரரானது இயல்பே. ஆயிரத்துக்கும் அதிகமான அடிமைகள் அவரது நிர்வாகத்தின் கீழ் வாழ்ந்தனர். அதிக எண்ணிக்கையிலான ஆடுகள், மாடுகள் மற்றும் குதிரைகள் அவரிடம் இருந்தது. அப்போது, எதையும் செய்ய வேண்டாம். வாழ்க்கை மிகவும் வளமானது. அடிமைகள் மீது ஈடிணையற்ற அதிகாரம் பெற்றிருந்ததாக இம்முதியவர் நினைவு கூர்ந்தார். திபெத்தில் ஜனநாயக சீர்திருத்தம் நடைபெற்ற பின், அடிமைகளின் சொந்தக்காரர் என்பதால் அவருக்கு தண்டனை விதிக்கப்பட்டது.
சிறையில் அடைபட்டிருந்த 20 ஆண்டுகளில் அவர் ஆடை தைக்கும் நுட்பத்தைக் கற்றுத் தேர்ந்தார். எனவே, சிறையை விட்டு விடுதலையானதும், தம் ஊருக்குத் திரும்பி ஆடை கடையை நடத்தத் துவங்கினார்.
1 2 3
|