
கடந்த 20 ஆண்டுகாலத்தில், திபெத்திற்கு சுற்றுலா செல்லுவோர் மென்மேலும் அதிகமாகி வருகின்றனர். இப்போது அனைவரும், வியாபாரம் செய்யலாம். தொழில் நிறுவனங்களை நடத்தலாம். தொழில் நிறுவனம் நடத்துவதற்கான நிலைமை தனக்கு இல்லை. அப்படியானால், ஹோட்டலை நடத்தி, சுற்றுலாத்துறையில் ஈடுபடும் எண்ணம் அவருக்குத் தோன்றியது. எனவே, தம் வீட்டின் நான்கு அறைகளைக் காலி செய்து, உள்ளூரில் முதலாவது ஹோட்டல் நடத்தத் துவங்கினார். மேலும், உள்ளூர் சுற்றுலா வாரியங்களுடன் தொடர்பு கொண்டு, தமது Mao Niu ஹோட்டலை விளம்பரம் செய்தார். இதனால், பயணிகள் பலர், அவரது ஹோட்டலில் வசித்து வருவதுடன், ஹோட்டலின் அளவும் பெரிதாக வளர்ந்துள்ளது. முன்பு நான்கு அறைகளாக இருந்து, தற்போது 20 அறைகளில் விருந்தினர்கள் வசிக்கின்றனர்.
இந்த ஹோட்டலில் விருந்தினர் அறைகளில் தொலைக்காட்சி பெட்டி இல்லை. நள்ளிரவு 12 மணிக்குப் பின் மின்சாரம் இல்லை என்ற போதிலும், இது மிகவும் சுத்தமாக உள்ளது. Pa Yang Zhen பட்டணத்தில், மிகவும் பிரபலமான ஹோட்டலாக இது மாறியுள்ளது. Yixiயும், உள்ளூரில் அனைவரும் தெரிந்தவராகினார். பின்னர், சீன மக்கள் அரசியல் கலந்தாய்வு மாநாட்டின் திபெத் தன்னாட்சிப் பிரதேசக் கமிட்டிக்கு அவர் பரிந்துரை செய்யப்பட்டார். ஐந்து முறை அவர் இப்பதவி வகித்திருக்கின்றார்.

அரசியல் கலந்தாய்வு மாநாட்டு உறுப்பினராகப் பணிபுரியத் துவங்கிய பின், உள்ளூர் ஆயர்கள் பலர் அவரைச் சந்தித்து, உள்ளூர் புல்வெளி கட்டுமானம் பாலம்-சாலை நிர்மாணம் முதலிய பிரச்சினைகள் பற்றி கோரிக்கை தெரிவித்தனர். Yixiயும், அவர்களின் கருத்துக்கள் மற்றும் முன்மொழிவுகளை தொடர்புடைய அரசு வாரியங்களிடம் தெரிவித்தார். இதனால், அவை தீர்க்கப்பட்டு விட்டன. இதன் விளைவாக ஆயர்களும் அவரும் மிகவும் மகிழ்ந்தனர்.
Yixiஇன் வீட்டில் திபெத் இன பாணியுடைய வீட்டுப் பயன்பாட்டு தட்டுமுட்டு சாமான்கள் இருக்கின்றன. அறைகளில், 9வது, பத்தாவது Ban Chan உருவச்சிலைகளும், சீனாவின் மூன்று தலைமுறை தலைமைப்பீடங்களின் தலைவர்களான மா சே துங், தெங் சியேள பிங், சியாங் சே மின் ஆகியோரின் படங்களும் தொங்கவிடப்பட்டுள்ளன. அவரது குடும்பத்தினர்கள் திபெத்திலும் உள்பிரதேசத்திலும் சுற்றுலா செல்லும் போது எடுக்கப்பட்ட படங்கள் அதிகமாக காணப்படுகின்றன. அவரது மகன், உள்ளூர் பொருளாதார வர்த்தக பணியகத்தின் பணியாளர். இரண்டு பேரன்களும் சாங் துங் மாநிலத்தின் ஜிங் நென் நகரில் உள்ள திபெத் இடைநிலைப்பள்ளிகளில் படிக்கின்றனர். மேலதிகமான அறிவைக் கற்றுக்கொண்டு எதிர்காலத்தில் ஊர் திரும்பி சேவை புரிய வேண்டும் என்பது, Yixiஇன் விருப்பமாகும்.
"இப்போது, எனது ஹோட்டல் நன்றாக இயங்குகின்றது. எனவே, பொதுவாகக்கூறின், தற்போதைய வாழ்க்கை மீது மிகுதியும் மனநிறைவு அடைகின்றேன்." என்றார். 1 2 3
|