• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-12-19 08:13:13    
Alibaba இணைய தளத்தை உருவாக்கிய Ma Yun

cri

கடந்த நூற்றாண்டின் 90ஆம் ஆண்டுகளின் நடுப்பகுதியில் இணைய தளம் சீனாவில் தோன்றிய பின், குறுகிய காலத்தில் விரைவான வளர்ச்சி கண்டுள்ளது. இந்தக் காலத்தில் இணைய தளங்களை வெற்றிகரமாக உருவாக்கி பலர் விரைவில் புகழ்பெற்றனர். இன்றைய நிகழ்ச்சியில், இணைய தள தொழிலின் பைத்தியம் என அழைக்கப்பட்ட Ma Yun பற்றி அறிமுகப்படுத்துகிறோம். தற்போது, உலகளவில் மிகப் பெரிய, Alibaba என்னும் மின்னணு வணிக இணைய தளத்தை அவர் நடத்துகிறார். 9 ஆண்டுகளுக்கு முன் அவரைப் பற்றி மற்றவர்கள் அறிந்திருக்கவில்லை. இன்றோ, Yahoo இணைய தளத்தை வாங்கிவிட்டதன் மூலம், அவர் உலக புகழ்பெற்றவராகி விட்டார்.

9 ஆண்டுகளுக்கு முன், இணைய தள நிறுவனம் பற்றி Ma Yun பிரச்சாரம் செய்த போது, சீனர்கள் இணைய தளத்தை அறியாமல் இருந்தனர். வீடுவீடாகச் சென்று விளம்பரம் செய்த Ma Yun, ஒரு மோசடிக்காரராகக் கருதப்பட்டார். ஆனால், கடந்த ஆகஸ்ட் திங்கள் பெய்ஜிங்கில் நடைபெற்ற ஒரு செய்தியாளர் கூட்டத்தில், தமது தலைமையிலான Alibaba இணைய தளம் Yahoo (China) நிறுவனத்தை வாங்கியதோடு, 100 கோடி அமெரிக்க டாலர் முதலீட்டையும் பெறுவதாக அவர் அறிவித்தார். இன்று வரை, சீன இணைய தள வரலாற்றில் இது மிகப் பெரிய பேரம் ஆகும். இது பற்றி குறிப்பிடுகையில் அவர் பெருமையுடன் கூறியதாவது—

"கடந்த ஜுலை 26ஆம் நாள் அமெரிக்கா சென்று விமானத்திலிருந்து இறங்கியதும், 'Yahoo (China) நிறுவனத்தை Alibaba நிறுவனம் வாங்கியிருப்பது, கூட்டு நிறுவனத்தை உருவாக்குவதற்காக அல்ல. Yahoo (China) நிறுவனம் Alibaba நிறுவனத்தை வாங்க முடியாது' என்று அந்த வழக்கறிஞர்களிடம் நான் சொன்னேன். இந்த அடிப்படை இல்லா விட்டால், தொடர்ந்து விவாதிக்க வேண்டாம் என்றும் கூறினேன்" என்றார் அவர்.

இந்தக் பேரத்தின் மூலம் Alibaba நிறுவனத்துக்கு 100 கோடி அமெரிக்க டாலர் முதலீடு கிடைத்தது மட்டுமல்ல, Yahoo (China) நிறுவனத்தின் இணைய தளம், Yahoo Search engineer, Instant Messenger, விளம்பரம், Yahoo என்ற தொழில் சின்னத்தை சீனாவில் காலவரம்பின்றி பயன்படுத்தும் உரிமம் ஆகியவையும் கிடைத்தன. அவற்றுக்கு ஈடாக, 40 விழுக்காடு பங்குகளையும், 35 விழுக்காடு வாக்களிப்பு உரிமையையும், இயக்குநர் குழுவில் ஒரு இடத்தையும் Alibaba நிறுவனம் வழங்குகிறது.

1  2  3