Alibaba நிறுவனத்தை நடத்திய போது, B to B மாதிரியை Ma Yun தெரிவு செய்தார். அதாவது, நடுத் தர மற்றும் சிறிய தொழில் நிறுவனங்கள் நேரடியாக இணைய தளத்தில் அலுவல் செய்யும்படி செய்யப்பட்டன. இது மிகவும் கடினமானது. அமெரிக்கா போன்ற இணைய தள தொழில் வளர்ச்சி அடைந்த நாடுகளில், தற்போது, மிக குறைவான தொழில் நிறுவனங்களே வெற்றி பெற முடியும். Ma Yun பெரிய இன்னலைச் சந்தித்த போது, SOFT BANK நிறுவனத்தின் ஆளுனர் சுன் செங் யி அவருக்கு ஆதரவு அளித்தார்.
2001ஆம் ஆண்டு, SOFT BANK நிறுவனம் 2 கோடி அமெரிக்க டாலரை Alibaba நிறுவனத்தில் முதலீடு செய்தது. இந்த பணத்தினால், இணைய தளத் தொழிலின் சரிவை Ma Yun தாக்கு பிடித்தார். 2003ஆம் ஆண்டு, சீனா சார்ஸ் நோயினால் பாதிக்கப்பட்ட போதிலும், மின்னணு வணிகம் பெரும் உள்ளார்ந்த ஆற்றலை வெளிப்படுத்தியது. இந்த நோயினால் ஏற்பட்ட சவாலை Ma Yun வெற்றிகரமான வாய்ப்பாக மாற்றினார். சார்ஸ் நோயின் காலத்தில் Alibaba நிறுவனத்தின் அலுவல்கள் 6 மடங்கு அதிகரித்தன. கடந்த ஆண்டில், அதன் ஒரே நாள் லாபம் வியக்கத்தக்க 10 லட்சம் யுவானை எட்டியது.
Ma Yunனின் தன்னம்பிக்கையும் மன உறுதியும் பற்றி குறிப்பிடுகையில், மனித வள நிபுணர் சென் ஆன் ச்சி மதிப்பிட்டுக் கூறியதாவது—
"உலகில் தோற்கடிக்கப்பட முடியாத போட்டியாளர் இல்லை. தன்னம்பிக்கையுடன் இருக்கும் போது, சுய பரிசோதனை இன்றியமையாதது. இப்படி செயல்பட்டால், எளிதில் தோற்கடிக்கப்பட முடியாது. Ma Yunனின் தன்னம்பிக்கையை நான் வியந்து பாராட்டுகிறேன். தன்னம்பிக்கை என்றால் தற்பெருமை என்று பொருள்படாது" என்றார் அவர்.
மற்றவரின் கருத்துகளைப் பொருட்படுத்தாமல், தாம் தெரிவு செய்த பாதையில் Ma Yun நடை போட்டு வருகிறார். இணைய தள தொழிலில் மிக கடினமான பணியை, அவர் தமது மன உறுதியைச் சார்ந்து, அதிக லாபம் தரக் கூடிய பணியாக மாற்றியுள்ளார். 1 2 3
|