Yahoo நிறுவனம் இணைய தளத் துறையில் மிகப் பெரிய நிறுவனம் என்பது அனைவரும் அறிந்ததே. தற்போது உலகளவில் 25 நிறுவனங்களை அது வாங்கியுள்ளது. முன்பு தனது சொத்துக்களை அது விற்கவில்லை.
வெளித் தோற்றத்தைப் பார்த்தால் Ma Yun ஒரு சாதாரண மனிதர். அவரை இணைய தள தொழிலின் பைத்தியம் என்று சொல்வது கடினம். 1964ஆம் ஆண்டு சீனாவின் கிழக்கு பகுதியில் அமைந்துள்ள சே ஜியாங் மாநிலத்தின் ஹாங் சோ நகரில் அவர் பிறந்தார். ஒரு சிறப்பு தொழில் நுட்பப் பள்ளியிலிருந்து படிப்பை முடித்துக் கொண்ட பின், ஹாங் சோ மின்னணு பொறியியல் கழகத்தில் அவர் ஆசிரியராக பணி பரிந்தார். தொழில் நுட்ப பின்னணியும் மூலதனமும் இல்லாத சாதாரண மனிதர் என்ற முறையில், தன்னம்பிக்கை மற்றும் தொழில் நடத்தும் மன உறுதி, Ma Yun வெற்றி பெறுவதற்கு முக்கிய காரணம்.
1999ஆம் ஆண்டில் ஹாங் சோ திரும்பிய அவர், Alibaba நிறுவனத்தை உருவாக்கினார். அவரின் லட்சியத்தில் இது ஒரு திருப்பு முனையாக அமைந்தது. அந்தக் காலத்தில், சீனாவில் இணைய தள தொழில் மிகவும் விறுவிறுப்பாக வளர்ந்து வந்தது. ஆனால், அந்த சீரான வளர்ச்சி நீண்டகாலத்திற்கு தொடரவில்லை. 2000ஆம் ஆண்டு இணைய தள பொருளாதாரம் தோல்வியில் முடிந்ததோடு, இணைய தள தொழிலும் முடங்கியது. Alibaba நிறுவனமும் பாதிக்கப்பட்டது. அமெரிக்காவிலும் உள்நாட்டிலும் உள்ள அதன் சில அலுவலகங்கள் அடுத்தடுத்து மூடப்பட்டன. இருப்பினும், Ma Yunனின் சிறந்த மன உறுதியினால், Alibaba நிறுவனம் சோதனைகளைத் தாக்கு பிடித்தது.
சீன இணைய தள தொழில் கடந்த அந்த கடினமான காலம், Ma Yun பொறுத்த வரை நல்ல நிகழ்ச்சியாக கூடும் என்று பெய்ஜிங் 6688 மின்னணு வணிக நிறுவனத்தின் தலைமை இயக்குநர் வாங் ஜுன் தௌ கருதுகிறார். அவர் கூறியதாவது—
"இணைய தள தொழிலின் முடக்கம், இணைய தள தொழிலில் முதலீடு செய்பவரின் முடக்கம், இணைய தள செய்தி ஊடகங்களின் முடக்கம். இந்த நிலை சற்று நீண்டகாலத்திற்கு நீடித்தால், Alibaba நிறுவனம் போன்ற போட்டியிடும் திறன் மிக்க இணைய தள தொழில் நிறுவனங்களுக்கு நன்றாக கூடும். அவை சார்ந்த தொழில் சூழல் மிக குளிராக இல்லை. சீனாவில் இணைய தளத்தைப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கையும், மின்னணு வணிக அலுவலில் நுழைந்த பாரம்பரிய தொழில் நிறுவனங்களின் எண்ணிக்கையும் அந்த காலத்தில் பெரிதும் அதிகரித்து வந்தன" என்றார் அவர்.
1 2 3
|