• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-12-21 17:31:40    
மலை வட்டாரத்தில் வாழும் ஒரு விவசாயியின் கதை

cri

இந்த விவசாயியின் பெயர் ஹு இங் சியாங். உள்ளூர் இயற்கை வளமான- தேயிலைச்செடிகளை வளர்ப்பதன் மூலம் தமது ஊரின் நிலைமையை மாற்றியமைத்துள்ளார்.

சீனாவின் நடு பகுதியில் ஹு நான் மாநிலத்தில் அமைந்துள்ள வூ லிங் மலைத் தொடர் சுமார் சில நூறு கிலோமீட்டர் நீளமுடையது. இங்கே மலை உயரமானது. மலைப் பிரதேசத்தில் பல்வகைச் செடிகள் உள்ளன. ஹு இங் சியாங்கின் குடும்பம் தலைமுறை தலைமுறையாக இந்த மலைப் பகுதியில் வாழ்ந்து வருகின்றது. 52 வயதான அவர், துவக்க பள்ளியில் மட்டும் பயின்றார். ஆனால், திறமையானவர். வேளாண்மை வேலையில் ஈடுபடுவதில் வருமானம் குறைவு. ஆகையால், 10 ஆண்டுகளுக்கு முன் பணம் சேமித்து, அவர் ஒரு சிறிய கடையை நடத்தினார். கடையில் விவசாயிகளுக்குத் தேவைப்படும் அன்றாத பொருள்கள் விற்பனையாகின. இந்தக் கடை மூலம் ஹு இங் சியாங் அதிக லாபம் ஈட்டினார்.

1996ஆம் ஆண்டு, வூ லிங் மலைப் பிரதேசத்தில் கடும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. வெள்ளத்தில், ஊரில் வீடுகளும் சாலைகளும் சேதமடைந்தன. ஹு இங் சியாங்கின் வீடும், கடையும் இடிந்தன.

அந்த வெள்ளம் ஹு இங் சியாங்கின் வாழ்க்கையை மாற்றியது. வெள்ளம் கடும் பாதிப்பை ஏற்படுத்தியது. மலைப் பிரதேசத்தில் மரங்கள் மட்டுமே பசுமையாக இருந்தன. அரசிடம் இருந்து நிவாரணத் தொகையை பெற்றாலும், வாழ்க்கை வளமடையவில்லை. சொந்த உழைப்பு, அறிவு ஆகியவற்றின் மூலம் தான் வாழ்க்கை தரத்தை உய்த்த முடியும் என்று அவர் எண்ணினார். ஒரு வகையான இயற்கை தேயிலைச் செடி அவருடைய மனதில் தோன்றியது.

அந்தப் பகுதியின் காலநிலை, மண் இந்த தேயிலைச் செடிகள் வளர்வதற்கு ஏற்றது. இந்த செடியின் இலையை வாயில் போட்டு, மென்றால், தாகம் தணியும். சுவையானது என்றார் அவர்.

1  2  3