• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-12-21 17:31:40    
மலை வட்டாரத்தில் வாழும் ஒரு விவசாயியின் கதை

cri

இந்தத் தேனீர் உற்பத்தி பற்றி ஆராய்ந்த போது, ஹு இங் சியாங் பல இன்னல்களைச் சந்தித்தார். துவக்க காலத்தில், தேயிலையின் நிறம் சிவப்பாக இருந்தது. அவர் மன நிறைவு அடையவில்லை. மேம்பாட்டு அறிவைக் கற்க வெளியூருக்குச் சென்றார். தவிர, பல நூல்களை வாங்கினார். 2 ஆண்டுகளுக்கு பின், சிறப்பு தொழில் நுட்பம் மூலம் இந்த தேனீரின் நிறம் பச்சையாக மாறியதோடு, சுவையும் மேலும் இனிப்பாக மாறியது.

தவிர, தேயிலைச் செடி வளர்ப்பதில் அவர் அதிக ஈடுபாடு காட்டினார். அவருடைய ஊரில் இயற்கை தேயிலைச் செடி அதிகமாக இருந்த போதிலும், பெரிய செடிகளைக் காணவில்லை. காரணம், இந்த செடிகள் மிகவும் இனிப்பாக உள்ளன. இலைகள் தவிர, தண்டும் மிகவும் இனிப்பானது. ஆகையால், இதில் பூச்சிக்கள் அதிகம். பெரிதாக வளர்க்க முடிவில்லை. ஹு இங் சியாங் தேயிலைச் செடிகளை வளர்க்கும் 2 வழிமுறைகளைக் கண்டுப்பிடித்தார். தற்போது, அவர் 6 ஹெக்டர் நிலபரப்புடைய நாற்றங்காலை உருவாக்கினார். 3 ஆண்டுகளுக்குப் பின்னர் தான், இவற்றில் இலைகளை பறிக்கலாம். எதிர்காலத்தில், தேயிலைச் செடிகளை வளர்க்கும் நிலப்பரப்பை அவர் மேலும் விரிவாக்கி, தனது பதனீட்டு ஆலைக்கு தேயிலை வழங்குவதுடன், நீர் மற்றும் மண்வளத்தையும் பாதுகாத்து, மலைச் சரிவில் வெள்ளத்தை தடுக்கலாம் என்று திட்டமிட்டுள்ளார்.

ஹு இங் சியாங்கின் தேயிலை ஆலை உள்ளூர் மக்களுக்கும் பயனளித்துள்ளது. ஆண்டுதோறும் அவர் 20 ஆயிரம் கிலோகிராம் தேயிலையை விவசாயிகளிடமிருந்து வாங்கினார். இது மட்டுமல்ல, விவசாயிகளுக்கு பயிற்சி அளித்து, அவர்களுக்கு தேயிலைச் செடிகளை வளர்க்கும் தொழில் நுட்பத்தைக் கற்பிக்கிறார். தற்போது, இயற்கை தேயிலைத் தொழில் உள்ளூர் விவசாயிகளின் வருமானத்தை உயர்த்தும் முக்கிய காரணமாகத் திகழ்கின்றது. இதன் மதிப்பை அறிந்து கொண்ட விவசாயிகள் இயற்கை தேயிலைச் செடிகளின் பாதுகாப்பு பணியில் தாங்களாகவே ஈடுபடுகின்றனர்.

ஹு இங் சியாங்குடன் ஒரே ஊரில் வசிக்கும் யாங் சியேன் சன் இனிப்பு தேனீர் விற்பனையில் ஈடுபடுகின்றார். மாவட்டத்தில் அவர் தேன்னீர் கடையை நடத்துகின்றார். இயற்கை தேயிலையின் இனிப்பை பலர் விரும்புகின்றார்கள் என்று அவர் கூறினார்.

மாவட்டத்தில் இந்தத் தேனீரின் விற்பனை நன்றாக இருக்கின்றது. மக்களின் வரவேற்பை பெற்றுள்ளது. இதனை நீண்டகாலமாக குடித்தால், உடல் நலம் மேம்படும். பலர் இதனை வாங்கி அன்பளிப்பாக நண்பர்களுக்கும் குடும்பத்தினர்களுக்கும் வழங்குகின்றனர். என் கடையில் ஆண்டுக்கு சுமார் 400 கிலோகிராம் தேனீர் விற்பனை செய்கின்றோம் என்றார் அவர்.

கடந்த ஆண்டின் மே திங்கள், ஹு இங் சியாங்கின் இனிப்பு தேனீர் ஹு நான் மாநிலத்தின் தொழில் நுட்ப சாதனை காட்சியின் தங்க பதக்கத்தைப் பெற்றது. அவருடைய தேயிலை ஜப்பான், அமெரிக்கா ஆகிய நாடுகளில் விற்பனை செய்கிறது. தற்போது தேயிலைதவிர, தேனீர் பானம், தேனீர் மது முதலிய பொருட்களைப் பதனீடு செய்வது பற்றி ஹு இங் சியாங் ஆராய்ந்து வருகின்றார்.


1  2  3