• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-12-21 17:31:40    
மலை வட்டாரத்தில் வாழும் ஒரு விவசாயியின் கதை

cri

இந்த தேயிலைச் செடி மலை பள்ளத்தாக்கில் வளரும் ஒரு வகையான பசுமை மாறா செடியாகும். உயரம் 2 மீட்டர். இதன் இலை இனிப்பு தேனீர் போல இனிமையானது. அங்குள்ள விவசாயிகள் மலைப் பிரதேசத்தில் வேலை செய்யப் போகும் போது, குடி நீரைக் கொண்டு செல்வதில்லை. இந்த செடியின் இலையை மெல்லுவதன் மூலம் தாகத்தை தீர்க்கின்றனர்.

உள்ளூர் மக்கள் இந்த செடிகளுடன் தலைமுறை தலைமுறையாக வளர்ந்த போதிலும், இது பற்றிய அறிவு குறைவு. இதன் பெயர் கூட அவர்களுக்கு தெரியாது. இதனை ஹு இங் சியாங் ஆராய துவங்கினார். இந்த செடியின் இலைக்கு, ரத்த அழுத்தத்தைக் குறைப்பது, மனிதரின் நோய் தடுப்பு சக்தியை அதிகரிப்பது, கல்லீரலைப் பாதுகாப்பது, முதுமை எதிர்ப்பு முதலிய பங்கு உண்டு என்று மருத்துவ நூல்கள் கூறுகின்றன. இந்த செடியின் இலையைப் பயன்படுத்தி, ஒரு வகை இனிப்பு தேனீரை உற்பத்தி செய்தால், மக்களின் வரவேற்பை பெறுவது உறுதி என்று ஹு இங் சியாங் கருதினார்.

அவர் கடனாக 80 ஆயிரம் யுவான் வாங்கினார். தேயிலை பதனிடும் ஆலையை நடத்தத் துவங்கினார். தேயிலையின் தரத்தை உத்தரவாதம் செய்யும் வகையில், ஊருக்கு 5 கிலோமீட்டர் அப்பால் உள்ள வீடுகள் இல்லாத மலைப் பிரதேசத்தில் அவர் இந்த பதனீட்டு ஆலையைக் கட்டினார். மனைவி, 2 குழந்தைகள் ஆகியோரின் உதவியுடன் அவர் சுறுசுறுப்பாக தொழில் நடத்துகின்றார். இத்தகைய முயற்சியுடன் தா சூ ஓர் எனும் வணிக உரிமம் உடைய இனிப்பு தேனீர் உற்பத்தி செய்யப்படுகின்றது.

முன்பு அவர் நினைத்தைப் போல், இந்த தேனீர் சந்தையில் மக்களின் வரவேற்பைப் பரந்தளவில் பெற்றுள்ளது. ஓராண்டுக்குள் ஹு இங் சியாங் கடனைத் திருப்பிக் கட்டினார். சீனத் தேயிலை துறையில் புகழ்பெற்ற நிபுணரும், உயர் நிலை வேளாண் நிபுணருமான செங் லியாங் பின் இந்த தேனீரை ஆராய்ந்த பின் கூறியதாவது,

இந்தத் தேனீர் நோய் தடுப்பு சக்தியை உயர்த்துவது, ரத்த சர்க்கரையைக் குறைப்பது முதலிய துறையில் தனிச்சிறப்பு மிக்க பயன் உடையது. பல் வலியையும் இது குறைக்கும். இத்தகைய தேனீர் உற்பத்தியைக் கண்டு நான் மிகவும் மகிழ்ச்சி அடைகின்றேன் என்றார் அவர்.

1  2  3