• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-12-23 11:50:06    
மங்கோலிய இன மகளிர் வாழ்க்கை

cri

Alatan Qimkகின் ஊர்

மங்கோலிய இனம், வட சீனாவில் உள்ள சிறுபான்மை தேசிய இனம். எங்கே நீரும் புல்லும் இருக்கின்றனவா அங்கு குடியேறும் நாடோடி வாழ்க்கை நடத்துகின்ற படியால், மங்கோலி இனப் பெண்கள் பெரும்பாலோர், வீட்டில் குடும்ப வேலை செய்து வருகின்றனர். துணி துவைப்பது, சமையல் செய்வது, குழந்தையை வளர்ப்பது ஆகியவை, அவர்கள் வாழ்க்கையில் முக்கிய அம்சங்களாகும். வெளிப்புறத்துடன் அவ்வளவு தொடர்பு கொள்வதில்லை. 7 ஆண்டுகளுக்கு முன், மங்கோலியப் பெண்கள் வளமடைவதற்கு உதவியாக, ஐ.நா. வளர்ச்சி திட்ட அலுவலகம் உள்மங்கோலியப் பிரதேசத்தில் சிறு தொகை கடன் வழங்கும் திட்டத்தைத் தொடங்கியது. மங்கோலிய இனப் பெண் ஒருவரை சென்று பார்த்து, இச்சிறு தொகை கடன் திட்டம் அவளுடைய வாழ்க்கையில் எத்தகைய மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது என்பதை அறிந்து கொள்வோம்.

Alatan Qimk கிழக்கு உள்மங்கோலியாவின் ஒரு மாவட்டத்தில் வசிக்கும் மங்கோலிய இனப் பெண் ஆவார். இங்கு துவக்க காலத்தில் சிறு தொகை கடனை முதலில் வாங்கிய பெண், இவர். அவரது வீட்டின் சிறு முற்றத்தில் மூன்று செங்கல் அறைகள் கண்களில் தென்பட்டன. அவை, சுத்தமானவை. மிகவும் கவர்ச்சிகரமானது என்ன என்றால், முற்றத்திலுள்ள சூரிய ஆற்றல் அடுப்பு ஆகும். இந்த எளிமையான சிறு முற்றத்தில் நவீன வாழ்க்கை முறை, இதனால் உருவாயிற்று.

வீட்டில், பெரிய வரவேற்பு அறையில் இளம் நீல சோபாக்கள் வரிசையாகப் போடப்பட்டுள்ளன. அமருமாறு சொல்லி அனைவருக்கும் பால் தேனீரை வழங்கினார். அன்றி, சுவையான பால் தயாரிப்புப் பொருட்கள் பலவற்றையும் மேசையில் வைத்தார். இப்பொருட்கள் அனைத்தும் தம்மால் தயாரிக்கப்பட்டவை என்றும், அப்பொருட்களை விற்பதன் மூலம் வருமானம் ஈட்டுவதாகவும், சிறு தொகை கடன் திட்டத்தினால் வளமடைவதற்கு இந்நுட்பத்தைக்கற்றுக்கொண்டதாகவும் Alatan Qimk எங்களிடம் தெரிவித்தார்.

1  2  3