
இச்சிறு தொகை கடன் திட்டத்தை மேலும் நன்றாக நடைமுறைப்படுத்தும் வகையில், மகளிரின் தொடர்ச்சியான வளர்ச்சி சங்கம் எனும் அமைப்பு உள்ளூரில் நிறுவப்பட்டது. சிறு தொகை கடனின் விநியோகம் மற்றும் பரிசீலனை பணிக்கு இது பொறுப்பேற்கின்றது. இச்சங்கத்தின் பொறுப்பாளர் Sawula அம்மையார் கூறியதாவது:
"பெண்களுக்கு நிதி தகவல், சட்டம் மற்றும் உடல் நலம்-சுகாதாரம் முதலியவற்றில் உதவிடுவது, இச்சங்கத்தின் நோக்கம். இங்குள்ள பெண்கள், முக்கியமாக குடும்ப உற்பத்தியில் ஈடுபடுகின்றனர். குடும்பத்தில் அதிகமாக உழைப்பவர், பெண்களே. முன்பு, அவர்களின் சாதனைகள் அங்கீகரிக்கப்படவில்லை. கல்வி பெறும் வாய்ப்பு குறைவு. இத்திட்டப்பணியை நடைமுறைப்படுத்துவது மகளிரின் கல்வியறிவையும் தகுநிலையையும் உயர்த்துவதற்கு துணையாயிருக்கின்றது." என்றார், அவர்.
கடந்த ஆண்டின் இறுதி வரை இச்சங்கம், மொத்தம் ஒருகோடியே 50 லட்சம் யுவானை விநியோகித்துள்ளது. 3600க்கும் அதிகமான பெண்கள் அதனால் நன்மை பெற்றுள்ளனர். சராசரியாக ஒவ்வொரு குடும்பமும் ஆண்டுக்கு ஆயிரத்து ஐந்நூறு யுவான் வருமானம் அதிகரித்துள்ளது. சுமார் 70 விழுக்காட்டு குடும்பங்களின் ஆண்டு வருமானம், உள்ளூர் வறுமைக் கோட்டைத் தாண்டிவிட்டது.

சிறு தொகை கடனால், அனைவரும் இவ்வளவு நன்மை பெற்றுள்ளதைக் கண்டு, Alatan Qimk அம்மையார், பயன்தரும் இதர விஷயங்களைச் செய்யத் திட்டமிட்டார். அவர் முயற்சி கொண்டதன் மூலம் உள்மங்கோலியத் தன்னாட்சிப் பிரதேச அரசிடமிருந்து இரண்டு லட்சம் யுவானை கடனாகப் பெற்றார். பெண்களின் கல்வியறிவை உயர்த்தும் வகையில், பள்ளிப் படிப்பை பாதியிலேயே நிறுத்திய பெண் குழந்தைகள் தொடர்ந்து கல்வி பயிலுவதற்கு உதவியாக, இக்கடனைக் கொண்டு விருப்பத் துவக்கப் பள்ளி ஒன்றைக் கட்டத் திட்டமிட்டார்.
Alatan Qimkஇன் சிறந்த செயல்பாட்டினால், 2004ம் ஆண்டு அக்டோபரில் சிறு தொகை கடனால் நன்மை பெற்றவர் என்ற முறையில், ஐ.நா. தலைமைச் செயலாளர் அன்னானும் அவரது மனைவியும் Alatan Qimkஐச் சந்தித்துரையாடினர். இது பற்றி கூறுகையில் அவர் பெருமிதத்தோடு கூறியதாவது:
"கடந்த ஆண்டு, அக்டோபர் 11ந் நாள், நான் பெய்சிங் வந்து, சீனாவிலுள்ள ஐ.நாவின் 25வது ஆண்டு நிறைவு விருந்தில் கலந்து கொண்டேன். சிறு தொகை கடன் வாங்கி, நன்மை பெற்ற இடைச்சிகளின் பிரதிநிதி என்ற முறையில் அன்னான் என்னைச் சந்தித்து பேசினார். மேடை ஏறி நான் உரையாற்றினேன். மங்கோலிய இன பெண்களின் சார்பில், நன்மை பெற்றுள்ள போக்கினை விளக்கிக்கூறினேன். அன்னானும் அவரது மனைவியும் என்னுடன் கைகுலுக்கினர். படம்பிடித்தனர். இது எனக்குத் தற்பெரும் தந்துள்ளது." என்றார், அவர். 1 2 3
|