• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-12-23 11:50:06    
மங்கோலிய இன மகளிர் வாழ்க்கை

cri

1998ம் ஆண்டு இச்சிறு தொகை கடன் திட்டத்தில் அவர் கலந்து கொள்ளத் துவங்கினார். உள்ளூர் பெண்களுக்காக மட்டுமே, உள்ளூர் மகளிர் சம்மேளனமும் ஐ.நா. வளர்ச்சி திட்ட அலுவலகமும் இணைந்து இதை ஏற்பாடு செய்தன. ஆண்டுக்கு பத்தாயிரத்துக்கும் அதிகமான யுவான், இச்சிறு தொகை கடனாக வழங்கப்படுகிறது. கடந்த 7 ஆண்டுகளில், அவர் இக்கடனைக்கொண்டு மரக்கன்றுகளை வாங்கி, மணல் குன்றில் மரம் நட்டு, அதன் மூலம் காற்றைத் தடுத்து மணல் அடித்துச் செல்லப்படாமல் தடுத்தார். அன்றி இக்கடனைப் பயன்படுத்தி, தீவனம் தயாரிப்பு தளத்தை அமைத்து, ஆடுமாடுகளை விரைவாக கொழுக்க வைக்கும் நுட்பத்தைக் கற்றுத் தேர்ந்தார். இச்சிறு தொகை கடன், உண்மையிலேயே தமக்கு பெரும் நன்மை தந்துள்ளதாக Alatan Qimk தெரிவித்தார்.

"இதன் விளைவாக, பெண்களின் நிலை உயர்ந்துள்ளது என்பது மிகப் பெரும் நன்மையாகும். இத்திட்டத்தில் பங்கெடுத்த பிறகு, நான் பொருளாதாரம் பற்றித் தெரிந்து கொண்டேன். குடும்ப வேலைகள் தவிர, வெளிப்புறத்துடனும் தொடர்பு கொள்ள முடிகிறது. இது, எனக்கு சுயநம்பிக்கை தருகின்றது. இதனால் குடும்பத்தைக் கவனிக்கும் பொருளாதார ஆற்றலும் உண்டு." என்றார், அவர்.

கிராமத்திலுள்ள இதர பெண்களையும், இச்சிறு தொகை கடன் பெறும் திட்டத்தில் கலந்து கொள்ளுமாறு அவர் தூண்டினார். இக்கடன் மூலம் மங்கோலிய இன பெண்கள் வீட்டை விட்டு வெளியே சென்று, சந்தைப் போட்டியில் பங்கெடுக்க முடிகின்றது. எப்போதும் பொருளாதாரச் சிந்தனையிலேயே உள்ளனர் என்று அவர் கூறினார். கடனை வாங்கி விதைகள் வாங்குகிறார். ஆட்டுக் குட்டிகள் வாங்கி வளர்க்கின்றனர். பயிரிடுதல், நீர்வாழ் உயிரினங்கள் வளர்ப்பு, கைவினைப் பொருட்களையும் பால் பொருட்களையும் தயாரிப்பது ஆகியவற்றின் மூலம் கிடைக்கும் வருமானத்தைக் கொண்டு கடனை கட்டுகின்றனர். ஆண்டின் இறுதியில் அறுவடை செய்யும் போது, கடனையும் வட்டியையும் கட்டியது போக, ஒவ்வொரு குடும்பத்துக்கும் பத்து ஆயிரம் யுவானுக்கும் அதிகமாக நிகரலாபம் கிடைக்கிறது. இதனால், பல குடும்பங்கள் வறுமையிலிருந்து விடுபட்டன.

1  2  3