• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International Wednesday    Apr 9th   2025   
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-12-26 15:30:22    
சீனாவின் நடுப்பகுதியின் பொருளாதாரம்

cri

நான்சாங் நகர்

பொருளாதார வளர்ச்சியின் நோக்கில் பார்த்தால், சீனாவின் கிழக்கு பகுதி, மிகவும் வளர்ச்சி அடைந்த கடலோரப் பகுதியாகும். அதனுடன் ஒப்பிடும் போது, மேற்கு பகுதி பின்தங்கியுள்ள போதிலும் அரசின் ஆதரவுடன் விரைவான வளர்ச்சி பெற்று வருகிறது. ஆனால் சீனாவின் நடுப்பகுதி மட்டுமே, மக்களால் மறக்கப்பட்டது போல் தோன்றுகிறது. தற்போது, இந்த சங்கடமான நிலையை நடுப்பகுதி புரிந்து கொண்டது. எனவே, வட்டாரப் பொருளாதாரத்தின் வளர்ச்சியை ஒருங்கிணைத்து, சீனாவில் பொருளாதார கட்டமைப்பு சீர்திருத்தப்படும் நிலையை தனக்கு சாதகமாக்கி, பல நடவடிக்கைகளின் மூலம், பொருளாதார வளர்ச்சியை அதிகரித்து வருகிறது.

சீனாவின் நடுப்பகுதியில் அமைந்துள்ள ஜியாங் சி மாநிலத்தின் நான்சாங் பொருளாதார மற்றும் தொழில் நுட்ப வளர்ச்சி மண்டலம், இம்மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு ஒரு முக்கிய காரணமாகும். தற்போது இந்த வளர்ச்சி மண்டலம் தன்னை ஒட்டிய கடலோர மாநிலங்களுடன் போக்குவரத்து துறையில் ஒத்துழைத்து, தனது பொருளாதார வளர்ச்சிக்கு புதிய வழியைக் கண்டுள்ளது. இந்த வளர்ச்சி மண்டல நிர்வாக கமிட்டியின் துணைத் தலைவர் தெங் யு ஹுய் அம்மையார் செய்தியாளரிடம் கூறியதாவது—

"எங்கள் மாநிலத்தில் நுழைவாயில் இல்லை. சில ஆண்டுகளுக்கு முன்பு, 'உலர் துறைமுகம்' என்ற கருத்தை நான்சாங் நகராட்சி முன்வைத்துது. அதாவது, கடலுக்குச் செல்லும் வசதியான பாதையை கட்டி, சென் சென், சியாமன், நிங்போ, ஷாங்காய் ஆசியவற்றுடன் கூட்டு போக்குவரத்து தொடரமைப்பை உருவாக்குவதன் மூலம், கடற்கரை துறைமுக நகரங்களின் வசதியான நிலையை, நிலம் சூழ்ந்த நகருக்கு பயன்படுத்துவது இதனுடைய நோக்கம்" என்றார் அவர்.

1  2  3  
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040