வூஹான் நகர்
நீண்டகாலமாக, சீனாவின் முக்கியமான தொழில், வேளாண் மற்றும் எரியாற்றல் தளமாக நடுப்பகுதி திகழ்கிறது. இப்பகுதியிலுள்ள சில மாநிலங்கள் முக்கிய போக்குவரத்து மையமாகவும் பின்னணி சேவை மையமாகவும் உள்ளன. கடந்த சில ஆண்டுகளில் மட்டுமே, இந்த மாநிலங்களின் பொருளாதார வளர்ச்சி பின்தங்கிய நிலையில் உள்ளது. எடுத்துக்காட்டாக, 1984ஆம் ஆண்டு, ஹுபெய் மாநிலத்தின் தொழில் மற்றும் வேளாண் துறையின் மொத்த உற்பத்தி, சீனாவில் 6வது இடம் வகித்தது. கடந்த சில ஆண்டுகளில் அதன் இடம் 10வது இடத்துக்கு தள்ளப்பட்டது.
வளர்ச்சி கொள்கை பற்றி குறிப்பிடுகையில், மைய நகரைச் சார்ந்து, சுற்றுப்புற நகரங்களின் வளர்ச்சியைத் தூண்டுவது வட்டார பொருளாதார வளர்ச்சிக்கு பயன் தரும் வழிமுறை என்று ஹுபெய் மாநிலத்தின் அதிகாரி சாங் சாங் ஏர் செய்தியாளரிடம் கூறினார். ஹுபெய் மாநிலத்தின் தலைநகர் வூஹான், சீனாவின் தொழில் தளமாகவும் புகழ்பெற்ற வணிக நகராகவும் உள்ளது. வூஹான் நகரை மையமாகக் கொண்டு சுற்றுப்புறத்தில் 8 நகரங்கள் சேர்ந்து ஒத்துழைக்கும் பொருளாதார மண்டலத்தை ஹுபெய் உருவாக்கி வருகிறது.
"வூஹான் நகர பொருளாதார மண்டலத்தை விரைவாக வளர்க்க, மாநிலம் முழுவதும் ஆதரவளிக்க வேண்டும். வூஹான் நகரை மேலும் பெரிய மற்றும் வலுவான நகராக வளர்க்க வேண்டும். தற்போது பல தொழில் நிறுவனங்களின் தலைமையகங்கள் வூஹானுக்கு இடம்பெயர்ந்துள்ளன" என்றார் அவர்.
வூஹான் நகர பொருளாதார மண்டலம்
நடுப்பகுதியிலுள்ள மாநிலங்கள் பல வேளாண் மாநிலங்களாகும். கடந்த சில ஆண்டுகளில், வேளாண் தொழிலின் வளர்ச்சிக்காக, சீனாவின் நடுவண் அரசும் மாநில அரசாங்கங்களும் சலுகைகள் பலவற்றை அறிவித்துள்ளன. ஹுபெய் மாநில அரசு அதிகாரி சாங் சாங் ஏர் கூறியதாவது—
"நீண்டகாலமாக விவசாயிகளின் சுமை அதிகமாக உள்ளது. வேளாண் உற்பத்தி பொருட்களினால் லாபம் குறைவு. தொழில் மயமாக்க அளவும் தாழ்ந்த நிலையில் உள்ளது. கிராமப் பொருளாதார மற்றும் சமூக வளர்ச்சி பின்தங்கியுள்ளது. இந்த பிரச்சினை நடுப்பகுதியில் குறிப்பிடத்தக்கது. தற்போது பல முக்கிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு, வேளாண் வரி நீக்கப்பட்டுள்ளது. விவசாயிகளிடம் வரி வசூலிக்க வேண்டாம் என்பது ஒரு முக்கிய சீர்திருத்தம்" என்றார் அவர்.
சீனாவின் நடுப்பகுதியில் பல இயற்கை வள மேம்பாடும் புவியியல் அமைப்பு மேம்பாடும் உண்டு. இந்த மேம்பாடுகள், நடுப்பகுதியின் வளர்ச்சிக்கு ஏற்ற நிலைமையை உருவாக்கி தரும். 1 2 3
|