• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-12-26 15:30:22    
சீனாவின் நடுப்பகுதியின் பொருளாதாரம்

cri

நான்சாங் பொருளாதார மற்றும் தொழில் நுட்ப வளர்ச்சி மண்டலம்

இந்த நான்சாங் பொருளாதார மற்றும் தொழில் நுட்ப வளர்ச்சி மண்டலத்தின் ஒத்துழைப்பு, தற்போது ஜியாங் சி மாநிலத்திலும் படிப்படியாக பரவி வருகிறது. ஜியாங் சி மாநிலம், பொருளாதார வளர்ச்சி அடைந்த யாங்ச்சி ஆற்று கழிமுகத்தையும் சுஜியாங் ஆற்று கழிமுகத்தையும் ஒட்டியுள்ள மாநிலம். கடற்கரை பிரதேசத்தின் பொருளாதார வளர்ச்சி மற்றும் தொழில் கட்டமைப்பின் மேம்பாட்டுடன், ஜியாங் சி மாநிலமும் வளர்ச்சி வாய்ப்பைப் பயன்படுத்தி, தனது இயற்கை வளம் மற்றும் சந்தை வசதிகள் மூலம், வளர்ச்சி அடைந்த மாநிலங்களின் தொழில் வளர்ச்சி முறையை ஏற்றுக் கொண்டு, தனது பொருளாதாரத்தை வளர்த்து வருகிறது.

ஜியாங் சி மாநிலத்தின் இந்தச் செயல், தற்போது, நடுப்பகுதியில் அமைந்துள்ள பல்வேறு மாநிலங்களின் முக்கிய பொருளாதார வளர்ச்சி போக்காக உள்ளது. ஷான் சி, ஹெநான், ஹுபெய், ஹுநான், ஆன்ஹுய், ஜியாங் சி ஆகிய 6 மாநிலங்கள் நடுப்பகுதியில் அமைந்துள்ளன. ஹுபெய் தவிர, இதர 5 மாநிலங்கள் கடலோர மாநிலங்களை ஒட்டியுள்ளன.

2004ஆம் ஆண்டு முதல், இந்த மாநிலங்கள் கடற்கரை பிரதேசத்துடன் ஒத்துழைப்பை வலுப்படுத்தியுள்ளன. தற்போது, ஹுநான் மற்றும் ஜியாங் சி மாநிலங்களின் சில பகுதிகள் ச்சு ஜியாங் ஆற்று கழிமுக பொருளாதார மண்டலத்தில் சேர்க்கப்பட்டுள்ளன. ஆன்ஹுய், ஹுபெய் ஆகிய மாநிலங்கள் ஆக்கப்பூர்வமாக யாங்ச்சி ஆற்று கழிமுக பொருளாதார மண்டலத்துடன் தொடர்பை வளர்க்கின்றன. ஷான்சி மற்றும் ஹெநான் மாநிலங்களும் இதர கடற்கரை பிரதேசத்துடன் நெருக்கமான பொருளாதார தொடர்பை உருவாக்கி வருகின்றன.

ஜியாங் சி மாநிலத்தின் வளர்ச்சி முறை பற்றி குறிப்பிடுகையில், அதன் மாநிலத் தலைவர் ஹுவாங் ச்சி சுவான் கூறியதாவது—

"வேளாண் தொழிலில், அடிப்படை வேளாண் வசதிகளை உருவாக்குவதற்காக, ஹுநான் மற்றும் ஹுபெய் மாநிலத்துடன் நாங்கள் அடிக்கடி தொடர்பு கொள்கிறோம். எரி பொருள் தேவையில், ஜியாங் சி மாநிலத்துக்கு தேவையான 50 விழுக்காடு நிலக்கரி, ஆன்ஹுய், ஷான்சி மற்றும் ஹெநான் மாநிலங்களிலிருந்து வருகிறது. ஜியாங் சி உற்பத்தி செய்யும் பல மூலவளங்கள், எடுத்துக்காட்டாக, செப்பு, டங்ஸ்டன் போன்றவை, நடுப்பகுதியிலுள்ள பல்வேறு மாநிலங்களுக்கு வினியோகிக்கப்படுகின்றன" என்றார் அவர்.

பொருளாதார வளர்ச்சியில், தங்களது போட்டியிடும் திறனை உயர்த்துவதற்கு இந்த மாநிலங்கள் முக்கியத்துவம் தருகின்றன.

1  2  3