• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-12-30 17:31:54    
உலகின் உயரமான மனிதர் மங்கோலிய இன ஆயர் பாவ் சி செங்

cri

இன்றைய சமூகத்தில், உயரமாக வளர்ந்தவர்களுக்கு பல வசதிகள் இருப்பதாகக் கூறலாம். பிறர் செய்ய முடியாத வேலைகளை உயரமானவர்கள் வெகு எளிதில் செய்ய முடியும். எடுத்துக்காட்டாக, கூடைப்பந்தாட்டம், விமான பணி பெண்கள் முதலியவை. அன்றி, பெரும்பாலான இளம் பெண்கள், காதலனைத் தேடும் போது, தனது காதலன் உயரமானவராக இருக்க வேண்டும் என்றே விரும்புகின்றனர். இருப்பினும், அளவுக்கு மீஞ்சி உயரமாக வளர்ந்து விட்ட இவருக்கு காதலி கிடைக்கவில்லை. இப்போது 50 வயதுக்கு மேலாகி விட்ட போதிலும், தனியாகவே வாழ்கின்றார். இதற்கிடையில், 30 ஆண்டுகளுக்கு மேலாக வீட்டை விட்டு வெளியே போகாமலும், பிறருடன் தொடர்பு கொள்ள விரும்பாமலும் அல்லல்பட்டார். இந்த ஆண்டில், அவரது உயரம், Guinness உலக சாதனைப் புத்தகத்தில் சேர்க்கப்பட்டு, உலகில் இயல்பு நிலையில் வளர்ந்துள்ள முதலாவது உயரமானவர் என்ற பட்டம் பெற்றிருக்கின்றார். அதன் பிறகு, அவரது வாழ்க்கையில் மாற்றம் ஏற்பட்டது. உங்களுக்கு, 2.361 மீட்டர் உயரமுடைய மங்கோலிய இன ஆயர் பாவ் சி செங் என்பவரை அறிமுகப்படுத்துகிறோம்.

வட சீனாவின் உள்மங்கோலியாவின் விரிவான புல்வெளியிலுள்ள ஆயர் குடும்பத்தில் பிறந்த அவர், தனது 15வது வயதில் திடீரென அசுர வேகத்தில் உயரமாக வளரத் துவங்கினார். 20 வயதில் அவருடைய உயரம் 2.1 மீட்டர். ஆனால், அப்போது இளைஞராக இருந்த அவர், தனது உடல் உயர்வினால் மகிழ்ச்சியடையவில்லை. மாறாக, பல வசதிக்குறைவு ஏற்பட்டதாக அவர் உணர்ந்தார். அதிகமாக சாப்பிட வேண்டும். ஆடை தைப்பதற்கு அதிக துணி வேண்டும். எங்கும் சென்றாலும், அவர் தங்குவதற்கு இடமில்லையே. வெளியே போகும் போது, எல்லோரும் சூழ்ந்து கொண்டனர்.

அவர் கூறியதாவது:அப்போது, நான் பிறரை விட உயரமானவர். நாள்தோறும் இதர இடங்களிலிருந்து வந்து என்னை பார்த்தனர். எனக்கு மிகவும் வெறுப்பு ஏற்பட்டது. 20 வயதுக்குப் பின், முன்பின் தெரியாதவர்களை சந்திக்க விரும்ப வில்லை. உடல் உயரம், எனக்கு பெரும் அமுக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. பிறர் என்னை போல் உயரமாக வளர்ந்ததில்லை. ஏன், எனக்கு? நோய்வாய்பட்டிருப்பது உறுதி என நான் நினைத்தேன் என்றார்.

1  2  3