• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-12-30 17:31:54    
உலகின் உயரமான மனிதர் மங்கோலிய இன ஆயர் பாவ் சி செங்

cri

20 வயதுக்குப் பின், அவர், மருத்துவமனைக்குச் சென்றார். உடல் சோதனையில், அவரது காலில் எலும்பு மூட்டு வீக்கம் தவிர எல்லாம் சரி என்று கூறிவிட்டனர். இதற்கிடையில், அவரது உயரமான உடல் வடிவம், கூடைப் பந்தாட்ட பயிற்சியாளரின் கவனத்தை ஈர்த்தது. கூடைப்பந்தாட்ட அணியில் சேருமாறு அவர், பாவ் சி செங்கிற்கு அழைப்பை விடுத்தார். இதை மகிழ்ச்சிகரமாக வரவேற்று, விரைவில் பயிற்சியில் ஈடுபடத் துவங்கினார். வருத்தம் என்ன என்றால், எவ்வாறு முயற்சி செய்தாலும், அவரது கால், கூடைப்பந்தாட்ட தலத்தில் தீவிர போட்டிக்குப் பொருத்தமற்றது. இரண்டு ஆண்டுகளுக்குப் பின், தம் ஊருக்குத் திரும்ப வேண்டிய நிலையில் வீடு திரும்பினார்.

வீடு திரும்பிய பின், பாவ் சி செங், புல்வெளியில் மேய்ச்சலில் ஈடுபடத் துவங்கினார். 20 வயதுக்கு மேலான இளங்கன்று, காதலியைத் தேடும் வயது வந்து விட்டது. பிறர் பரிந்துரை செய்ததன் மூலம், அவர், அடுத்தடுத்து கிராமத்து பெண்மணிகள் பலரைச் சந்தித்தார். 2 மீட்டருக்கு மேல் உயரமான அவரை தலைநிமிர்ந்து தான் பார்க்க வேண்டும் என்பதால் பெண்கள் விரும்பவில்லை. இந்நிலையில் அவர் மேலும் நம்பிக்கையிழந்து சோர்வடைந்தார். மிருகங்களைப் பார்ப்பது போல மற்றவர்கள் தன்னைப் பார்க்கிறார்களோ என அஞ்சி, பாவ் சி செங் வீட்டை விட்டு வெளியே போவதை மேலும் குறைத்துக் கொண்டார்.

சகோதரர்-சகோதரிகளிடையே பாவ் சி செங், மிக இளயவர். குடும்பத்தினர் அனைவரும் அவரை நேசிக்கின்றனர். வெளியே போய் வேலை செய்ய விரும்பவில்லை என்பதால், அவர் வீட்டில் தங்கியிருந்து, வீட்டு வேலைகளைக் கவனிக்கும் பொறுப்பில் குடும்பத்தினர் அவரை அமர்த்தினார்கள்.

பாவ் சி செங் 40வது வயதான போது அவரது தாய் காலமானார். இது அவருக்கு ஒரு பெரும் அடி. ஏனெனில், அவரை தாய் மிகவும் நேசித்தார். உயரமானவர் என்ற காரணத்தில் அவருக்கு ஏற்ற ஆடை மற்றும் சப்பாத்து, சந்தையில் இல்லை. இதனால், தாய், தாமாகவே அவருக்கு ஆடை தைத்து சப்பாத்து தயாரித்து தந்தார். மரணத்துக்கு முன், சேமிப்புக்காக, தாய், பருத்தி சப்பாத்துக்கள் பலவற்றையும் தயாரித்தார்.

1  2  3