• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-12-27 10:59:37    
மாணவர்களிடையில் தடுப்பூசி போடுவது 

cri

கலை.....ஆமாம். சீன பொறியியல் கழகத்தின் மூத்த்றிஞரான புகழ் பெற்ற குழந்தை துறை நிபுணர் ஹூ யா மெய் அம்மையார் இது பற்றி கூறியதை கேளுங்கள்.

2003ம் ஆண்டில் சார்ஸ் நோய் சீனாவில் பரவிய போது குழந்தைகள் இந்த நோய் காரணமாக மரணமடையும் விகிதம் பூஜியமாக இருந்தது.. ஏன்னெனறால், குழந்தைகளுக்கிடையில் ஊசி மருந்து போடும் பணி நன்றாக செயல்பட்டது. இளம் பிள்ளை வாதம், தட்டம்மை நோய்களை தடுக்கும் ஊசி மருந்துக்கு சார்ஸ் நோயை தடுக்கும் மருத்துவ குணம் உண்டு என்று கண்டு கொள்ளலாம்.

ராஜா.....இது தவிர, 15 ஆண்டுகளுக்கு முன் சீனாவில் மாவட்டம் என்ற பிரிவாக கொண்டு அங்கு வாழ்கின்ற குழந்தைகளில் 85 விழுக்காட்டினருக்கு நோய் தடுப்பு ஊசி போடப்பட்டது. இந்த விகிதாசாரம் ஐ.நா குழந்தைகள் நல நிதியம், உலக சுகாதார அமைப்பு, சீன சுகாதார அமைச்சம் ஆகியவற்றின் கூட்டு ஆய்வின் மூலம் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. அப்படித்தானா?

கலை.....ஆமாம். நோய் தடுப்பு பணி பெருமளவில் வளர்ச்சியடைந்ததுடன் அம்மை, காலரா, கொள்ளை நோய், காச நோய், hepatitis B நோய், கக்குவான் இருமல், டிப்தீரியா நோய், tetanus நோய், இளம் பிள்ளை வாதம், தட்டம்மை போன்ற தொற்று நோய்கள் சீனாவில் நிகழும் விகிதம் மிகவும் குறைந்து விட்டது. எடுத்துக்காட்டாக, தட்டம்மை நோய் கடந்த 60ம் ஆண்டுகளின் துவக்கத்தில் ஒரு லட்சத்துக்கு 2000 என்றிருந்து ஒரு லட்சத்துக்கு 10 என்ற அளவில் குறைந்தது.

1  2  3