• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-01-09 13:30:05    
"குட்டிநண்பர்கள்" வழங்கும் வணிக வாய்ப்புக்கள்

cri

"குட்டிநண்பர்கள்" எனப்படும் 2008 பெய்ஜிங் ஒலிம்பிக் சின்னங்கள் கடந்த நவம்பர் திங்கள் வெளியிடப்பட்ட பின், அவை தொடர்பான வணிகப் பொருட்கள் தற்போது சீனாவின் முக்கிய நகரங்களில் நன்கு விற்பனையாகின்றன. பல இடங்களில், "குட்டிநண்பர்கள்" சின்னங்களின் விநியோகம் அடிக்கடி தடைப்பட்டது. சில சிறு நகர்களிலும், பரந்துபட்ட கிராமப்புறங்களிலும், ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி பொருட்களை விற்பனை செய்யும் சிறப்புக் கடைகள் இல்லாததால், பெய்ஜிங் போன்ற பெரிய நகரங்களில் "குட்டிநண்பர்கள்" பொருட்களை வாங்குமாறு நண்பர்கள் அல்லது உற்றார் உறவினர்களை பலர் வேண்டிக் கொண்டனர். "குட்டிநண்பர்கள்" பொருட்களினால், சீனாவுக்கு பல பத்து கோடி அமெரிக்க டாலர் மதிப்புள்ள வருமானம் கிடைக்கும் என்று நிபுணர்கள் எதிர்பார்க்கின்றனர்.

பெய்ஜிங்கில், ஒலிம்பிக் விளையாட்டுப் பொருட்களை விற்பனை செய்ய சிறப்பு அனுமதி பெற்ற கடை ஒன்றில், "குட்டிநண்பர்கள்" பொருட்களை வாங்கும் மக்களின் கூட்டம் அதிகமாகக் காணப்படுகிறது. அந்த நாள் இக்கடையில் விற்பனை செய்யப்பட்ட பஞ்சுப் பொம்மைகளை வாங்கும் அதிர்ஷ்டம் திரு Lu Linக்கு கிடைத்தது.

"முதலிலேயே, பஞ்சுப் பொம்மைகளை நான் வாங்கி விட்டேன். இந்த பஞ்சுப் பொம்மைகளை வாங்குமாறு என்னை வெளியூரில் உள்ள நண்பர் வேண்டிக் கொண்டார்." என்றார் அவர்.

திரு Lu Lin போல், பஞ்சுப் பொம்மைகளை வாங்கும் அதிர்ஷ்டம் Jiang Jin என்ற இளம் பெண்ணுக்கு இல்லை. தாம் மிக விரும்பும் பஞ்சுப் பொம்மைகளை வாங்க முடியாமல் போனதால், "குட்டிநண்பர்கள்" படம்போட்ட பட்டுத்துணியை வாங்கியதாக அவர் ஏமாற்றத்துடன் செய்தியாளரிடம் கூறினார்.

பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுச் சின்னங்களான Beibei, Jingjing, Huanhuan, Yingying, Nini ஆகிய 5 குட்டிநண்பர்களும் நெருக்கமானவர்கள். இனிய நண்பர்கள். அவர்களின் வடிவில், மீன், பாண்டா, ஒலிம்பிக் ஒளிப்பந்தம், திபெத் மறிமான், குருவி ஆகிய உருவங்கள் காணப்படுகின்றன. ஐந்து "குட்டிநண்பர்களின்" பெயர்களை இணைக்கும் போது, சீன மொழியில் "பெய்ஜிங் உன்னை வரவேற்கிறது" என்று பொருள்படுகிறது.

1  2  3