• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-01-09 13:30:05    
"குட்டிநண்பர்கள்" வழங்கும் வணிக வாய்ப்புக்கள்

cri

"குட்டிநண்பர்கள்" தோன்றியதும், மக்களின் வரவேற்பை பெற்றுள்ளன. அவர்களின் இனிய உருவங்களை சீனர் விரும்புவது மட்டுமல்ல, வெளிநாட்டவர் பலர் அவற்றின் மீது ஆர்வம் காட்டுகின்றனர். ரஷியாவின் Anna Allabert அம்மையார் கூறியதாவது--

"இந்த "குட்டிநண்பர்களை" நான் மிகவும் விரும்புகின்றேன். இவை சீனாவின் தனிச்சிறப்பு வாய்ந்தவை. மேலும் அதிக "குட்டிநண்பர்களை" வாங்கி, நினைவுப் பரிசுகளாக நண்பர்களுக்கு வழங்க நான் விரும்புகின்றேன்." என்றார் அவர்.

ஐப்பானின் Suenaga Yuki அம்மையார், "குட்டிநண்பர்கள்" வாங்கும் விருப்பத்தை தெரிவித்தார். அவர் கூறியதாவது:

"என் கற்பனைக்கு எட்டாத அழகுடன் குட்டிநண்பர்கள் உள்ளனர். "குட்டிநண்பர்களை" வாங்க நான் விரும்புகின்றேன்" என்றார் அவர்.

பெய்ஜிங்கில் உள்ள ஒலிம்பிக் பொருட்களின் விற்பனைக்கான ஒரு சிறப்பு அனுமதி கடையின் பொறுப்பாளர் Wang Xiao Yan அம்மையார் பேசுகையில், தற்போது 300க்கு அதிக வகையான "குட்டிநண்பர்கள்" பொருட்கள் இருக்கின்றன. இவற்றில், பட்டுத்துணி, டி-சர்ட், எழுது பொருள், பட்டை ஆகியவை அடங்கும். "குட்டிநண்பர்கள்" பஞ்சுப் பொம்மைகளை சீனர்களும் வெளிநாட்டவர்களும் மிகவும் விரும்புகின்றனர் என்றார். அண்மையில், "குட்டிநண்பர்கள்" பொருட்களின் விற்பனை மிக நன்றாக இருந்தது என்று செய்தியாளரிடம் Wang Xiao Yan கூறினார். அவர் கூறியதாவது--

"முன்பு, எங்கள் அன்றாட விற்பனைத் தொகை, 10-20 ஆயிரம் யுவான் மட்டுமே. "குட்டிநண்பர்கள்" பொருட்கள் விற்பனை செய்யப்பட்ட பின், விற்பனை தொகை கணிசமாக அதிகரித்து விட்டது. ஒரு திங்களில், எங்கள் விற்பனை தொகை சுமார் ஒரு கோடி யுவானாக உயர்ந்து விட்டது" என்றார் அவர்.

தற்போது, சீனாவில் ஒலிம்பிக் பொருட்களின் விற்பனைக்கான 28 சிறப்பு அனுமதி கடைகள் இருக்கின்றன. தவிர, 160க்கு அதிகமான தற்காலிக விற்பனை கடைகளும் நிறுவப்பட்டுள்ளன. பெய்ஜிங், ஷாங்காய், Shen Zhen, Qing Dao, Nan Jing, Cheng Du உள்ளிட்ட பெரிய நகரங்களில், "குட்டிநண்பர்கள்" பொருட்களை வாங்கலாம்.

1  2  3