
ஒலிம்பிக் பொருளாதார நிபுணர்களின் திட்டக் கமிட்டியின் உறுப்பினரும், சீன renmin பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த வணிகக் கல்லூரி பேராசிரியருமான Lu Dong Bin பேசுகையில், "குட்டிநண்பர்கள்" பொருட்களின் சந்தை மதிப்பு, 30 கோடி அமெரிக்க டாலரை தாண்டக்கூடும் என்று எதிர்பார்கின்றார்.
"குட்டிநண்பர்கள்" பொருட்களின் விற்பனையிலிருந்து கிடைத்த வருமானம் மட்டுமே இதுவாகும். இதன் தொழில் தொடரின் உள்ளுறை மதிப்பு, இந்த பல பத்து கோடி அமெரிக்க டாலரை விட மிக அதிகமாகும் என்று Lu Dong Bin விவரித்தார். இது பற்றி அறிய "குட்டிநண்பர்கள்" பஞ்சுப் பொம்மைகளை உற்பத்தி செய்யும் தொழிற்சாலை ஒன்றுக்கு செய்தியாளர் சென்றார். இங்கு, ஒவ்வொரு உற்பத்தித் தொடர் பணியாளர்கள் பாடுபடுகின்றனர். தொழிற்சாலையில் உற்பத்தித் திறன் உயர் நிலையை அடைந்து விட்டது. இருந்த போதிலும், இத்தொழிற்சாலையில், அன்றாட உற்பத்தி அளவு வரம்புக்கு உட்பட்டதாகவே இருக்கின்றது. மாபெரும் சந்தையின் தேவையை இது நிறைவு செய்ய முடியாது. தொழிற்சாலையில், Wang Hong எனும் தொழிலாளர், செய்தியாளரிடம் இதற்கான காரணத்தை விவரித்தார். "குட்டிநண்பர்கள்" பஞ்சுப் பொம்மைகளின் உற்பத்தியில், பல கட்டங்கள் உள்ளன. இக்கட்டங்களில், "குட்டிநண்பர்களின்" தலையை தயாரிப்பதற்கு சிக்கலான தொழில் நுட்பம் தேவைப்படுகின்றது என்று அவர் தெரிவித்தார்.
இத்தொழிற்சாலையின் அன்றாட உற்பத்தி அளவையும் லாப தொகையையும் பொறுப்பாளர் இறுதியில் தெரிவிக்கவில்லை. இருந்த போதிலும், பொருளாதார பயன் அதிகம் என்பது தொழிற்சாலையில் சுறுசுறுப்பான வேலை நடைபெறுவதில் இருந்து தெரிகிறது.
"குட்டிநண்பர்கள்" பொருட்களின் சந்தையை மேலும் செவ்வனே வளர்க்கும் பொருட்டு, "குட்டிநண்பர்களின்" அறிவு சார் சொத்துரிமையைப் பாதுகாக்க, பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் அமைப்பு கமிட்டி சட்ட நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. "குட்டிநண்பர்கள்" மிக பெரிய சந்தை பயனைப் பெறுவதற்கு உத்தரவாதம் அளிக்க, "குட்டிநண்பர்கள்" அறிவு சார் சொத்துரிமையை மீறும் செயல்களைத் தண்டிக்க சீனாவின் சட்ட அமலாக்கத் துறை தற்போது வலுப்படுத்தப்பட்டுள்ளது. 1 2 3
|