|  கலை.....வணக்கம் நேயர்களே. பப்பாளிப் பழம் நமது உடல் வளர்ச்சிக்கு எந்த வகையில் பயன் தருகின்றது என்பதை இன்றைய நல வாழ்வுப் பாதுகாப்பு நிகழ்ச்சியில் பார்ப்போம். என்னோடு சேர்ந்து உங்களோடு பேசுகிறார் ராஜாராம். ராஜா....வணக்கம் கலையரசி, பப்பாளிப் பழம் என்றாலே எனக்குப் பிடிக்காது.
 கலை....ஏன். எதனால்?
 ராஜா...அது ஏதோ மருந்து வாசனை போல் இருக்கும். அப்புறம், அதுல இனிப்புக் கொஞ்சம் கம்மி.
 கலை....உடலுக்கு நல்லது எல்லாமே மருந்து போலத் தான் இருக்கும்.
 ராஜா...எந்த வகையில் பப்பாளிப் பழம் உடம்புக்கு நல்லது?
 கலை....பழத்தை அப்புறம் தின்னலாம். முதலில் பப்பாளிக் காயைப் பார்ப்போம்.
  ராஜா...காயும் பயன் தருமா?
 கலை...ஆமா. வாழை போல இதனுடைய மரத்தின் எல்லாப் பாகங்களுமே மனிதனுக்குப் பயன்படுகின்றது. பப்பாளிக் காயில் இருந்து பால் போல ஒரு திரவம் காயை அறுத்தால் வெளியே கசியும். அந்த திரவத்தில் பப்பாயின் சிமோ பப்பூயின் என்று இரண்டு வகை என்ஜைம்கள் உள்ளன.
 ராஜா...அதாவது நொதிமங்கள்.1  2  3
 |