• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-01-10 17:44:27    
பப்பாளிப் பழத்தின் பயன்கள்

cri

கலை....ஆமா. இந்த இரண்டு நொதிமங்களும் உணவில் இருந்து நமக்கு கிடைக்கும் புரதங்களைச் செரிக்க உதவுகின்றன. இவ்வாறு புரதம் செரிக்கும் போது பல்வேறு அமினோ அமிலங்கள் நம் உடம்பில் சுரக்கின்றன. அவற்றிலே முக்கியமானது ஆர்ஜினைன் என்னும் அமினோ அமிலம். இது உடலின் தசைகளை வலுப்படுத்தி கொழுப்பைக் குறைக்கக் கூடியது.

ராஜா....அப்படியானால் குண்டர்கள் பப்பாளிக் காயை பச்சையாகத் தின்னலாம். ஆனா ஒன்று இது உடல் கொழுப்பைத் தான் குறைக்கும். வாய்க்கொழுப்பைக் குறைக்காது.

கலை.....வாய்க் கொழுப்பா? என்ன சொல்றீங்க?

ராஜா...ஆமா. வரம்பு மீறி பேசுவது வாய்க் கொழுப்புதானே. உடம்புக் கொழுப்பைக் குறைக்க உணவுக் கட்டுப்பாடு வாய்க் கொழுப்பைக் குறைக்க மனக்கட்டுப்பாடு என்ன நான் சொல்றது?

கலை....ரொம்பசரி. பப்பாளியை இப்போ பார்ப்போம். 35 கிராம் இறைச்சியைச் செரிப்பதற்கு ஒரு கிராம் பப்பாயின் போதும் என்கிறார்கள். ஆராய்ச்சியாளர்கள். அதனாலதான் மாமிச உணவுத் தயாரிப்புக்களை மென்மைப்படுத்த பப்பாயின் பயன்படுத்தப்படுகின்றது.

ராஜா....பப்பாளிக் காயில் மட்டும் தான் இந்த பப்பாயின் நொதிமம் இருக்கா?

கலை....பழுக்காத பப்பாளிக் காயில் நிறைய இருக்குது. பப்பாளி இலை, தண்டு போன்றவற்றில் கொஞ்சம் இருக்குது. குடல் புண், அஜீரணம் போன்ற வயிற்றுக் கோளாறு உள்ளவர்கள் பப்பாளிக்காய் சாப்பிடலாம். மேலும் உணவுச் சத்துக்களை உறிஞ்சக் கூடிய ஒரு வகையான ஒட்டுயிரிகள் நமது குடலில் சிலசமயம் வளர்கின்றன. அவற்றை இந்தப் பப்பாயின் நொதிமம் கட்டுப்படுத்துகின்றது.

ராஜா...பப்பாளிப் பழம் உடம்புக்கு சூட்டை தரும் என்பார்கள். அதனால கருவுற்ற பெண்கள் இதைத் தின்றால் கருக்கலைப்பு ஏற்பட்டுவிடும் என்று சொல்வார்கள்.

கலை....அப்படியானால் சாதாரண காலத்தில் இதைத் தின்னலாமே. புற்றுநோய் செல்களில் பைஃய்ரின் என்ற ஒரு நார்ப் பொருள் இருக்கின்றது. இது தான் புற்று நோயை நமது உடம்பின் மற்ற பகுதிகளுக்கு பரப்புகின்றது. இந்த பைஃப்ரினை கட்டுப்படுத்தும் ஆற்றல் பப்பாயினுக்கு உண்டு. அதனால புற்றுநோய்க்காக கதிர்வீச்சு சிகிச்சை எடுப்பவர்கள், பப்பாயினை சேர்த்துக் கொண்டால் சீக்கிரம் குணமடையலாம் என்று கண்டு பிடித்திருக்கிறார்கள்.

ராஜா.....உடம்புக்கு உள்ளே ஏற்படும் நோய்களை பப்பாளி குணப்படுத்துகின்றது. சரி, உடம்புக்கு வெளியே ஏற்படக் கூடிய காயங்கள்?

கலை....பப்பாளி மரத்தின் தண்டில் இருந்து எடுக்கப்படும் பாலினால் காயம் கட்டி, பரு போன்ற புண்களைக் குணப்படுத்தலாம். காயத்தின் மீது பப்பாளி துண்டுகளை வைத்து அகலமான பப்பாளி இலைகளால் கட்டுப் போட்டுவிடுகிறார்கள். அப்புறம் பப்பாளி மரத்தின் பட்டை இருக்கே அது பல்வலியைப் போக்கும். அதனாலதான் சூயிங்கம் தயாரிப்பில் பப்பாளிப் பால் பெரிதும் பயன்படுத்தப் படுகின்றது.

ராஜா...எனக்கு ஒரு சந்தேகம். பப்பாளி பழத்தை நறுக்கும் போது அதில் உள்ள விதைகளை தூக்கிப் போட்டு விடுறாங்களே. அதனால் பயன் இல்லையா?


1  2  3