• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-01-10 17:44:27    
பப்பாளிப் பழத்தின் பயன்கள்

cri
கலை....பழத்திற்கும் காய்க்கும் தண்டுக்கும் பட்டைக்கும் இத்தனை நல்ல குணங்கள் இருக்கும் போது விதைக்கு மட்டும் இல்லாமல் போய்விடுமா என்ன? கறுப்பு முத்து போன்ற பப்பாளி விதைகளில் "கார்பெய்ன்"என்று ஒரு ரசாயனப் பொருள் உள்ளது. அது இதயத்தின் வேகமான துடிப்பை நிதானப்படுத்தக் கூடியது. குடலில் அமீபா மூலம் ஏற்படும் வயிற்றுப் போக்கை கட்டுப்படுத்தக் கூடியது. அப்புறம் பப்பாளிப் பூ இருக்கு இல்லையா?

ராஜா...அதுவும் முக்கியமானதா?

கலை...ஆமா. பப்பாளிப் பூ பெண்களின் மாதவிலக்கு கோளாறுகளை சீர்படுத்தக் கூடியது. மேலும் சுவாசக் குழாய் நோய்களையும் குணப்படுத்துகின்றது. இன்னும் ஒரு விஷயம் தெரியுமா?

ராஜா...என்னது?

கலை....பப்பாளியில் BETA CAROTIN பீட்டா கரோட்டின் என்ற பொருள் நிறைய இருக்குது. இது புற்று நோய் எதிர்ப்பு சக்தியை நமது உடம்புக்குத் தருகின்றது. இந்த கரோட்டின் நமது உடலில் ஏ வைட்டமினாக மாறுது. பார்வைக் கோளாறு ஏற்படாமல் இருக்க ஏ வைட்டமின் அவசியம் தேவை.

ராஜா....கண் குருடாகாமல் தடுக்க பப்பாளி கருத்துக் குருட்டை தடுக்க என்ன செய்வது?

கலை....அதற்கு நல்ல சிந்தனை தேவை சரி. நீங்க சொன்னீங்களே. பப்பாளி பழம் இனிக்காது என்று அது உண்மைதான். 100 கிராம் எடையுள்ள பப்பாளி பழத்தில் 32 கலோரிதான் உள்ளது. இவ்வாறு இனிப்புக் குறைவாக இருப்பதால்தான் உடல் பருமனைக் கட்டுப்படுத்துகின்றது. ஒரு விஷயம் தெரிஞ்சுக்கோங்க. இனிப்பும் அளவுக்கு மீறினால் விஷமாகும். சரிதானே.

ராஜா...பார்வைக் கோளாறு வராமல் இருக்க பப்பாளி உண்போம். கருத்துக் கோளாறு வராமல் இருக்க நல்ல சிந்தனை வளர்ப்போம்.

கலை.....நேயர்களே பப்பாளிப் பழத்தின் பயன்கள் பற்றி கேட்டீர்கள். இத்துடன் நல வாழ்வு பாதுகாப்பு நிகழ்ச்சி நிறைவடைகின்றது.


1  2  3