
மியோங் இன மங்கைகள்
தென்மேற்கு சீனாவின் Gui Zhou, குவான் சி, யுன்னான் முதலிய இடங்கள், முக்கியமாக மியோங் இனத்தவர் கூடிவாழும் பிரதேசங்களாகும். அங்கு மலைகள் தொடராக உள்ளன. ஆற்று நீர் தெளிவானது. எழிலான இயற்கை காட்சிகள் கண்களுக்கு இனிமையாக தென்படுகின்றன. மியோங் இனத்தவர் Lu Sheng எனும் இசைக் கருவியை இசைப்பதும், வண்ண வண்ணமான தேசிய இன ஆடைகளும் மக்களை அங்கிருந்து விட்டு வெளியேறாதவாறு செய்கின்றன.
மியோங் கிராமத்தில் யுவர்கள், Lu Sheng இசையை ஊதியதும் இளம் பெண்கள், தம்மை அறியாமல், ஆடுவர். மியோங் இனத்தவரின் மகிழ்ச்சி, இக்கருவி இசையுடன் துவங்கும்.
1 2 3
|