
எனவே, மியோங் கிராமத்தில் Lu Sheng இசை கேட்டதும், பெரியவர்கள் குழந்தைகள் அனைவரும் வட்டமாக சூழ்ந்து கொண்டு, Lu Sheng இசை ஊதும் இளைஞர் நடனத்துக்குத் தலைமை ஏற்க, எல்லோரும் இசைத்தாளத்துக்கு ஏற்ப நடனமாடுவர். மாபெரும் விழாவில் அடிக்கடி பல பத்து அல்லது நூறு Lu Sheng கலைஞர்கள் சேர்ந்து ஊதுவர். அப்போது இசை காதுக்கு இனிமையானது. எண்ணற்றவர்கள் நடனமாடுவர். இக்காட்சி மிகவும் கம்பீரமானது. மியோங் இனத்தின் பாரம்பரிய விழாவான Bai Niao Yi விழாவில் இத்தகைய Lu Sheng இசை நிகழ்ச்சி கேட்கலாம்.
இவ்விழா பொதுவாக வசந்த காலத்தில் நடைபெறும். அழகான ஆடைகளை அணிந்த மியோங் இன ஆண்களும் பெண்களும் மலைச்சரிவில் குழுமியிருந்து, கருப்பு நிற ஆடை அணியும் இளங்கன்று, இனிமையான இசை இசைத்து, அவ்வப்போது இசையுடன் வட்டமிட்டும் குதித்தும் நடனமாடுவார். சித்திர தையல் வேலையுடைய வண்ண ஆடையணியும் மங்கையர்கள் இசையுடன் நடனமாடி மகிழ்வர். நடனமாடும் போது அவர்களின் தலையில் கட்டப்பட்ட மணிகள் குலுங்கி ஒலிக்கும். அவர்களின் பாவாடை விளிம்பு, இசையுடன் சேர்ந்து விரியும். மகிழ்ச்சிக்கடலில் மூழ்கிய இந்நடன அரங்கு, பருவ காலத்துக்கு ஏற்ற ஒரு மாபெரும் கண்காட்சி போலிருக்கின்றது. 1 2 3
|