
Lu Sheng என்பது, மூங்கிலால் தயாரிக்கப்பட்டது. தெற்கு சீனாவில் பல சிறுபான்மை தேசிய இன மக்கள், இக்கருவியை விரும்புகின்றனர். ஆனால், இதர தேசிய இனங்களின் பழக்கத்துடன் வேறுபட்டது என்னவென்றால், மியோங் இனம் Lu Sheng இசைக்கருவியை ஊதும் நேரம் கண்டிப்பாக விதிக்கபடுகின்றது. பல்லாண்டுகளாக Lu Sheng கலை நிகழ்ச்சியில் ஈடுபட்டு வரும் மியோங் இன முதியவரான Tang Fei இதை அறிமுகப்படுத்தியதாவது:
"ஒவ்வொரு ஆண்டின் நவம்பர் திங்கள் முற்பகுதியில் இலையுதிர்காலம் அறுவடை செய்யப்பட்ட பின்னும், புத்தாண்டு நாட்களிலும் விழா நாட்களிலும் ஊதலாம். பழக்க வழக்கங்களின் படி, மே திங்களுக்குப் பின் ஊதக்கூடாது என விதிக்கப்படுகின்றது. புதிதாகப்பயிரிடப்பட்ட நெல் விதை நன்றாக வளராது என அஞ்சுவதே இதற்குக் காரணமாகும்" என்றார்.
1 2 3
|