• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-01-13 15:37:37    
சீன சிறுபான்மை தேசிய இன மொழி மற்றும் எழுத்துக்களின் பாதுகாப்பும் வளர்ச்சியும்

cri

தற்போது "கதிரவனும், நிலாவும், நட்சத்திரங்களும்" எனும் மங்கோலிய இன பாடல், சீன இணையத்தில் மிகவும் பிரபலமானது. மங்கோலிய இனக்குடும்பத்தினர்கள், இப்பாடலை பாடுகின்றனர். இணையத்தின் மூலம் பரவியதும், அனைவரும் இதை மிகவும் விரும்பிக் கேட்கின்றனர். பலர், இதை செல்லிடப் பேசியில் மணியோசையாகக் கொள்கின்றனர். பெரும்பாலோர், பாடலின் வரிகளைப் புரிந்து கொள்ளவில்லை. இருப்பினும், உற்சாகமூட்டும் தாளம், தனித்தன்மை வாய்ந்த தேசிய இனச்சிறப்பு ஆகியவற்றினால், இப்பாடல், அவர்களை பெரிதும் ஈர்த்துள்ளது. சீனாவின் சிறுபான்மை தேசிய இனங்களின் மொழி மற்றும் எழுத்துக்களின் பாதுகாப்பும் வளர்ச்சியும் பற்றி அறிய ஆவலாக இருக்கலாம்.

சீனா, பல தேசிய இனங்களைக் கொண்ட, ஒன்றிணைந்த ஒரு நாடு. ஹான் இன மக்கள், மக்கள் தொகையில் மிகப் பெரும்பான்மையாக உள்ளனர். அவர்கள் பயன்படுத்தும் ஹான் இன மொழியும் ஹான் இன எழுத்துகளும் அதிகாரப்பூர்வமான மொழியும் எழுத்துகளும் ஆகும். ஹான் இனம் தவிர, சீனாவில் வேறு 55 சிறுபான்மை தேசிய இனங்கள் இருக்கின்றன. அவற்றில் மிகப் பெரும்பாலானவை தத்தமது இனத்திற்காக தனியாக மொழியும் எழுத்துகளும் கொண்டுள்ளன. இரண்டு வகை மொழி மற்றும் எழுத்துக்களைப் பயன்படுத்தும் இனங்கள் இவற்றில் குறைவல்ல. தற்போது, சீனாவில் மொத்தம் 80க்கும் அதிகமான சிறுபான்மை தேசிய இன மொழிகளும் இருபதுக்கும் அதிகமான சிறுபான்மை தேசிய இன எழுத்துக்களும் உள்ளன. மங்கோலிய இனத்துக்கு சொந்த மொழியும் எழுத்துக்களும் உண்டு. அன்றி, கால வளர்ச்சியுடன் புதிய சொற்களும் மங்கோலிய இன மொழியில் சேர்க்கப்பட்டுள்ளன.

"ஆனால், சில தேசிய இனங்களின் மொழி நிலைமை, அவ்வளவு நம்பிக்கை ஊட்டவில்லை. வட கிழக்கு சீனாவின் மஞ்சு இனத்தவர்கள் துக்க வேளையில் அஞ்சலி செலுத்தும் போது பாடும் அஞ்சலிப்பாடல் வரிகளை நீங்கள் கேட்டுக்கொண்டிருக்கின்றீர்கள். தற்போது சீனாவில் ஒருகோடிக்கும் அதிகமான மஞ்சு இன மக்கள் வசிக்கின்றனர். இருப்பினும் இது வரை மஞ்சு இன மொழி பேசக்கூடியவர்களின் எண்ணிக்கை, 100க்குட்பட்டதாகும்."

1  2  3