
200 ஆண்டுகளுக்கு முன் பரவிய மஞ்சு இன மொழி, அப்போதைய சீன சிங் வம்ச காலத்தின் அதிகாரப்பூர்வ மொழிகளில் ஒன்றாகும். ஆனால், சிங் வம்ச ஆட்சி வீழ்ச்சியடைந்ததும், மஞ்சு இன மொழியை மக்கள் பயன்படுத்தாமல் விட்டு விட்டனர். இருப்பினும், மஞ்சு இனம் தொடர்பான பெருமளவு தகவல்கள் பாதுகாக்கப்பட்டுள்ளன. வரலாற்றை மேலும் நன்றாக அறிந்து கொள்ள, சீனாவின் தொடர்புடைய துறைகள், விவரமான திட்டமிட்டன. இத்திட்டங்களுக்கு இணங்க, மஞ்சு மொழி போன்ற, அழியும் அபாயத்தில் உள்ள சிறுபான்மை தேசிய இன மொழிகளைப் பயனுள்ள முறையில் பாதுகாக்கும் வகையில், தேசிய இன மொழியியல் நிபுணர்கள், அகராதிகளையும் ஒலி மற்றும் ஒளி நாடாக்களையும் வெளியிட்டுள்ளனர். சொந்த இனத்தின் மொழி-பண்பாடு மீது பற்றுக்கொள்வோர்களும் முயற்சி மேற்கொண்டுள்ளனர். அவர்கள் சுயமாக படித்து, அழியும் விளம்பிலுள்ள சிறுபான்மை தேசிய இன மொழிகளை சீர்ப்படுத்துகின்றனர். தத்தமது இனத்து மொழிகளும் எழுத்துக்களும் தொடர்ந்து நிலவச் செய்திடுவது, அவர்களின் நோக்கமாகும்.
தேசிய இன மொழிகளும் எழுத்துக்களும் நன்றாக பாதுகாக்கப்பட்டால் பண்பாடு தொடர்ந்து நிலைத்திருக்க முடியும். சீன தேசிய இன விவகாரக்கமிட்டியின் கீழுள்ள சிறுபான்மை தேசிய இன மொழி-எழுத்து பணி அலுவலகத்தின் தலைவி அன் சிங் பிங் அம்மையார் கூறியதாவது:
"எங்கள் நாட்டின் அரசியல் அமைப்பு சட்டத்திலும் தேசிய இனப் பிரதேச தன்னாட்சி சட்டத்திலும் சிறுபான்மை தேசிய இனங்களின் மொழிகள-எழுத்துக்கள் தொடர்பான உரிமைகள் தெளிவாக வகுக்கப்பட்டுள்ளன. பல்வேறு தேசிய இனங்கள் சொந்த மொழிகள்-எழுத்துகளைப் பயன்படுத்தும் உரிமைக்கு பெரும் மதிப்பும் விளக்கமும் அளிக்கப்பட வேண்டும். அவற்றை அலட்சியம் செய்யக் கூடாது. வலுக்கட்டாய முறையில் அவற்றை மாற்றக்கூடாது" என்றார்.
1 2 3
|