• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-01-13 15:37:37    
சீன சிறுபான்மை தேசிய இன மொழி மற்றும் எழுத்துக்களின் பாதுகாப்பும் வளர்ச்சியும்

cri

புள்ளிவிவரங்களின் படி, தற்போது சீனாவில் ஐந்து கோடிக்கும் அதிகமான சிறுபான்மை தேசிய இன மக்கள், தத்தமது இனத்து மொழிகளையும் எழுத்துக்களையும் பயன்படுத்துகின்றனர். சிறுபான்மை தேசிய இனத்து மொழிகளை தடையின்றி பயன்படுத்துவதற்கு உத்தரவாதம் செய்யும் வகையில், சீன அரசு, சட்டம், நிர்வாகம், கல்வி, சமூக சூழல் முதலிய நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

சிறுபான்மை தேசிய இனத்து மொழிகளும் எழுத்துக்களும் தொடர்ந்து வளர்ந்து முழுமை அடைந்திட, கடந்த நூற்றாண்டின் 50ம் ஆண்டுகள் முதல் மொழிகளை ஆராய்ந்து, சிறுபான்மை தேசிய இன மொழிகள்-எழுத்துக்கள் பற்றிய தகவல்களை சீராக்கும் பணியில் சீன அரசு ஈடுபடத்துவங்கியது. மத்திய அரசிலும் பல்வேறு நிலை உள்ளூர் அரசுகளிலும் சிறுபான்மை தேசிய இன மொழிகள்-எழுத்துக்கள் பற்றிய பணிக்கு வழிகாட்டுவதற்குப் பொறுப்பான சிறப்பு அமைப்புகள் இருக்கின்றன. சீனாவின் பல்வேறு தேசிய இன பிரதேசங்களில் துவக்க நிலைப் பள்ளிகளிலும் இடைநிலைப்பள்ளிகளிலும் தேசிய இன மொழிகளில் கல்வி கற்பிக்கலாம். முனைவர் பட்டம் முதுகலை பட்ட மாணவர்களுக்கு சொந்த மொழிகளில் பாடம் கற்பிக்கும் தேசிய இனங்களும் இருக்கின்றன. சோ சியா சுயே ராங் மத்திய தேசிய இன பல்கலைக்கழகத்தின் திபெத் இனவியல் ஆய்வகத்தில் திபெத் இன மொழியைக் கொண்டு பாடம் சொல்லிக்கொடுக்கின்றார்.

"நான் முக்கியமாக, திபெத் இன மத வரலாறு, ஹான் திபெத் இன மொழியாக்கம் ஆகிய பாடங்களைச் சொல்லிக்கொடுக்கின்றேன். திபெத் இன மொழியில் மாணவர்களுக்கு திபெத்தின் வரலாறு, மதம், பண்பாடு, ஹான் மற்றும் திபெத் இன மொழியாக்கம் பற்றிய கருத்து நடைமுறையாக்கம் ஆகியவற்றை சொல்லிக்கொடுக்கின்றேன். எனது மாணவர்கள் படிப்பை முடித்த பின், முக்கியமாக சிறுபான்மை தேசிய இன பண்பாட்டைப் பரப்பும் பணியில் ஈடுபடுவார்கள்" என்றார்.

தற்போது, சீனாவின் பல்வேறு நிலை வானொலிகள் நாள்தோறும் 21 சிறுபான்மை தேசிய இன மொழிகளில் நிகழ்ச்சிகளை ஒலிபரப்புகின்றன. 80க்கும் அதிகமான செய்தி நிறுவனங்கள், 15 சிறுபான்மை தேசிய இன எழுத்துக்களில் செய்தி ஏடுகளை வெளியிடுகின்றன. தவிரவும், சந்தையில் பல வகை தேசிய இன மொழிகள்-எழுத்துகளால் வெளியிடப்படும் இதழ்கள், நூல்கள், திரைப்பட மற்றும் ஒலி-ஒளி நாடாக்கள் விற்பனையாகின்றன.

விரைவாக வளரும் காலத்தில், தேசிய இன மொழிகளும் எழுத்துக்களும் எவ்வாறு வளரும் பிரச்சினை ஏற்படுகின்றது.


1  2  3